districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பூத்து குலுங்கும் சூரியகாந்தி 

உதகை, ஜூலை 16- நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள  கர்நாடகா மாநில  மலைக்கிராமங்களில் சூரியகாந்தி பூக்கள் பயிரிடப் பட்டுள்ளது. இந்த பூக்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.  இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் எல்லை யில் அமைந்துள்ளது கர்நாடக மாநிலத்திற்குட்பட்ட   அங்களா, குண்டல்பேட் ஆகிய மலைக் கிராமங்களாகும்.  இங்குள்ள விவசாயிகள், 100 ஏக்கருக்கு மேல் சூரிய காந்தியை பயிர் செய்துள்ளனர். தற்போது சூரியகாந்தி பூக்கள் லட்சக்கணக்கில் பூத்துக் குலுங்குகின்றன.  இந்த சூரியகாந்தி பூக்களில் பறவைகள், தேனீக்கள் படையெடுத்து வருவது போல் அங்களா வழியாக நீலகிரிக்கு  செல்லும் சுற்றுலாப் பயணிகள், தங்களது வாகனங்களை நிறுத்தி சூரியகாந்தி பூக்களுடன் சுய படம் மற்றும் புகைப் படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.  சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்ட சூரிய காந்தி பூக்கள் பூத்துள்ளதால், அப்பகுதி முழுவதும் மஞ்சள்  நிறத்தில் காட்சியளிக்கிறது.

தலைக்கவசம் அணிய வலியுறுத்தி மாரத்தான்

சேலம், ஜூலை 16- சாலை விதிகளை பின்பற்றவும், அனைவரும் தலைக் கவசம் அணிய வலியுறுத்தியும் மாரத்தான் போட்டி நடை பெற்றது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற் றனர்.  சாலை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு மற்றும் தன்னார்வ அமைப்பின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக, சேலம் மாநகர காவல்துறை மற்றும்  தனியார் அமைப்பு சார்பில் மாரத்தான் போட்டி நடை பெற்றது. இந்த போட்டியை சேலம் மாநகர காவல் துணை  ஆணையர் லாவண்யா கொடி அசைத்து துவக்கி வைத் தார். இந்த மாரத்தான்  ஐந்து ரோடு பகுதியில் தொடங்கி, ராம கிருஷ்ணா சாலை, அஸ்தம்பட்டி, நீதிமன்ற சாலை, ஏற்காடு  அடிவாரம் வழியாக சென்று மீண்டும் ஐந்து ரோடு பகுதியில்  நிறைவடைந்தது. இதில் பள்ளி மாணவ- மாணவிகள், இளை ஞர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர். இதைத்தொடர்ந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்ற  அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தென்மேற்கு பருவமழை குறைவு  கொப்பரை உலர வைப்பு பணி தீவிரம்

கோவை, ஜூலை 16- தென்மேற்கு பருவமழை குறைந்த தால், கொப்பரை உலர வைப்பு பணி தீவிரமடைந்துள்ளது.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி  மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங் களில் தென்னை விவசாயமே அதிகப் படியாக உள்ளது. பொள்ளாச்சி  மட்டுமின்றி, கிணத்துக்கடவு, நெகமம்,  வடக்கிபாளையம், கோவில் பாளையம், ஆனைமலை, ராம பட்டிணம், அம்பராம்பாளையம், ஆழி யார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் தென்னை சாகுபடி அதிகளவில் உள்ளன. தென்னையில் உற்பத்தியாகும் தேங்காய் பிரித்து உரிக்கப்பட்டு, அதை  பிரித்து எடுக்கப்படும் கொப்பரைக்கு வெளிமார்க்கெட்டில் அதிக கிராக்கி  உள்ளது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் தென்னை சாகுபடி அதிக ளவில் உள்ளதால், அதனை சுற்றியுள்ள கிராமங் களில் சுமார் 300க்கும் மேற்பட்ட களங் களில் கொப்பரை உலர வைக்கப்படு கிறது. கொப்பரையை உலர வைத்த பின்னர், எண்ணெய், பால்பவுடர் உள் ளிட்டவை தயாரிக்க வெளியிடங் களுக்கு அதிகளவில் அனுப்பி வைக்கப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை  வெயிலின் தாக்கம் இருக்கும் போது, கொப்பரை உலர வைக்கும் பணி அதிக ளவில் இருக்கும். அந்நேரத்தில் கொப் பரை உற்பத்தி அதிகரிப்பதுடன், வெளி யிடங்களுக்கு ஏற்றுமதியும் அதிகமாக  இருக்கும். கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் சில நாட்கள் கோடை மழை  பெய்தது. அப்போது, கொப்பரை உலர  வைக்கும் பணி சற்று தடைபட்டது.  அதன்பின், கடந்த ஜூன் மாதம் இறுதி யிலிருந்து தென்மேற்கு பருவமழை  பெய்ய துவங்கியது. ஜூலை  மாதம்  முதல் வாரம் வரை வெயிலின் தாக்கம் குறைந்து அவ்வப்போது சாரல் மழை யால், கொப்பரை உலரவைக்கும்  பணி மிகவும் பாதிக்கப்பட்டது. தற் போது கொப்பரை உலரவைக்கும் பணி  தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

“ஹாப்பி ஸ்டிரீட்” நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் கொண்டாட்டம்

கோவை, ஜூலை 16- சாய்பாபா காலனி பகுதியில் ஞாயிறன்று நடைபெற்ற “ஹாப்பி ஸ்டிரீட்” நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் கலந்து  கொண்டு மகிழ்ச்சியடைந்தனர். கோவை மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்களின் சார்பில் கோவை மாநகராட்சியில் ஆர்.எஸ்.புரம், பந்தைய சாலை ஆகிய பகுதிகளில் “ஹாப்பி ஸ்டிரீட்” நிகழ்ச்சி வாரந் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சாய்பாபா காலனி, என்எஸ்ஆர் சாலையில்  ஞாயிறன்று “ஹாப்பி ஸ்டிரீட்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு ஆடல், பாடல்கள் என உற்சாகத்தில் ஈடு பட்டனர். இம்முறை கூடுதலாக, மக்களே விளையாடும் பெரிய அளவிலான பரமபதம், மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் ஆகிய விளையாட்டுகள் இடம்பெற்றிருந்தன. இதுபோன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விளையாடு வது தங்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிப் பதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு, ஜூலை 16- திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரியால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலம் செல்வ தற்கு முக்கிய சாலையாக இருப்பது சத்தியமங்கலம் அடுத் துள்ள திம்பம் மலைப்பாதை. அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் இந்த மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழ்நாடு, கர்நாடகாவை சேர்ந்த பேருந்து, லாரி, கார், வேன், இருசக்கர வாகனங்கள் இந்த  மலைப்பாதையில் சென்று வந்தபடி இருக்கும். இதற்கி டையே, அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் அடிக்கடி பழுதாகி நின்று  விடுகின்றன. அதனால் திம்பம் மலைப்பாதையில் போக்கு வரத்து பாதிப்பு என்பது தீராத பிரச்சனையாக உள்ளது. இந் நிலையில் கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகரில் இருந்து கோவைக்கு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதையின் 12 ஆவது கொண்டை ஊசி வளைவில் லாரி வந்தபோது, திரும்ப முடியாமல் பழுதாகி அப்படியே நின்றுவிட்டது. இதனால் அவ்வழியாக வந்த பேருந்து, லாரி  உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. சிறிய  வாகனங்கள் மட்டுமே சென்று வந்தன. அதன்பின் பண்ணாரி யில் இருந்து மெக்கானிக் ஒருவர் வரவழைக்கப்பட்டார். அவர் வந்து பழுதை சரிசெய்த பின்னரே லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் திம்பம் மலைப்பாதையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டிராக்டர் மோதி தாய், மகள் பலி

நாமக்கல், ஜூலை 16- பள்ளிபாளையம் அருகே டிராக்டர் மோதி, இருசக்கர வாக னத்தில் சென்று கொண்டிருந்த தாய், மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள சின் னார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல். இவரது மனைவி தவமணி. இத்தம்பதியினருக்கு நான்கு மகள்கள்  உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மூன்றாவது  மகளுக்கு திருமணமாகிய நிலையில், இறையமங்கலம் பகுதி யில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஆடி பண்டிகையை யொட்டி, தனது மகளை தாய் தவமணி, மூத்த மகள் இந்து மதியுடன் சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி  கொண்டிருந்தனர். கொக்கராயன்பேட்டை அருகே வந்து  கொண்டிருந்தபோது, பின்னால் கரும்பு பாரம் ஏற்றி வந்த  டிராக்டர், இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள் ளானது. இதில் மகள் இந்துமதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். படுகாயமடைந்த தாய் தவமணி சிகிச் சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிபாளை யம் போலீசார், டிராக்டர் ஓட்டுநரான திருச்செங்கோடு பகுதி யைச் சேர்ந்தவரிடம் பள்ளிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டுக்கூடு ஏலம்

தருமபுரி, ஜூலை 16- தருமபுரியில் பட்டு வளர்ச் சித்துறை சார்பில் செயல் பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட் டங்களில் இருந்து விவசாயி கள் பட்டுக்கூடுகளை விற்ப னைக்கு கொண்டு வருகின்ற னர். இந்த அங்காடிக்கு சனி யன்று 3,576 கிலோ பட்டுக் கூடு கொண்டு வரப்பட்டன. இதில் ஒரு கிலோ அதிகபட்ச மாக ரூ.520க்கும், குறைந்த பட்சமாக ரூ.300க்கும், சரா சரியாக ரூ.421.04க்கும் விற்ப னையானது. மொத்தம் ரூ.15 லட்சத்து 5ஆயிரத்து 850க்கு ஏலம் போனது.

 

;