சேலம், ஆக.29- ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டு மூன்றாண்டு கடந்த நிலையிலும், ஆதிக்கசாதியினரின் அச்சுறுத்தல் காரண மாக அலுவலகத்திற்கு செல்ல மறுத்த தலித் ஊராட்சி மன்ற தலைவரை அலுவலகத்திற்கு வரவழைத்து நாற்காலியில் அமரவைத்த மார்க்சிஸ்ட் கட்சியின் நடவடிக்கை அனை வரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சேலம் மாவட்டம், தலைவாசல் தாலுகா, புத்தூர் கிராமத்தில் சுமார் 1600க்கும் மேற் பட்ட தலித் மக்கள் வசித்து வருகின்றனர். இந் நிலையில், புத்தூர் ஊராட்சியில் தலித் சமூகத் தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் காளீஸ் வரி மூன்றாண்டுகளுக்கு முன் தேர்வு செய் யப்பட்டார். ஆனால், தேர்வு செய்யபட்டதில் இருந்து ஊராட்சி மன்ற தலைவர் தனது இருக்கையில் அமருவது இல்லை. இந்நிலை யில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புத் தூர் கிளையின் சார்பில், கடந்த ஆக.17 ஆம் தேதியன்று, மக்களின் அடிப்படை பிரச்சனை சம்பந்தமான கோரிக்கை மனுவை ஊராட்சி மன்ற தலைவரிடம் கொடுக்க முயற்சி செய் தனர். அப்போது, அவர், அலுவலகத்திற்கு வேண்டாம் “எனது வீட்டிற்கு வந்து கொடுங் கள்; வாங்கிகொள்கிறேன்” என ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார். இதனை ஏற்க மறுத்த மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள், “ஊராட்சி அலுவலகத்திற்கு வாருங்கள். அங்குதான் மனு அளிப்போம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அவரோ, தலித் சமுதாயத்தை சேர்ந்த நான் எப்படி இருக்கையில் அமருவதென, ஊராட்சி தலை வர் காளீஸ்வரி தயக்கம் காட்டியுள்ளார். மேலும், ஆதிக்கசாதிகளால் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் ஏதாவது ஆபத்து ஏற் பட்டுவிடுமோ என்ற அச்சத்திலும் அவர் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் புரிந்து கொண்டனர். இதனைய டுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆக.30 ஆம் தேதியன்று (இன்று) தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, அடிப்படை வசதிகள் கேட்டு ஆர்ப் பாட்டம் என அறிவிக்கப்பட்டது. மேலும், காவல் துறையில் அனுமதியும் பெறப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்ட அறிவிப்பை யடுத்து காவல் துறையினர், திங்களன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதன் பேரில், தலைவாசல் காவல் அலுவலகத்தில் காவல் ஆய்வாளர் அழகு ராணி தலைமை யில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இவ் வாய்ப்பை மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் பயன்படுத்தி, தலித் ஊராட்சி மன்ற தலைவ ரான காளீஸ்வரியை, அவரது இருக்கையில் அமர வேண்டும். அங்குதான் கோரிக்கைகள் குறித்து பேச முடியும் என தெரிவித்தனர். இதனையடுத்து, காளீஸ்வரியை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் வரவழைத்து, அவ ரது நாற்காலியில் அமர வைத்து, அலுவலகப் பணியை செய்ய வைத்தனர். இதனைத் தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்த கோரிக்கை களை மார்க்சிஸ்ட் கட்சியினர் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த பேச்சுவார்த்தையின்முடிவில், புத்தூர் ஊராட் சியில் இருக்கிற சமுதாயக்கூடத்தை அனைத்து சமுதாயத்தினரும் பயன்படுத்திக் கொள்ள வும், சமுதாய கூட்டத்திற்கு வெளியில் சமு தாயக்கூடத்தில் நிகழ்ச்சி நடத்துவதற்கான கட்டணத்தையும், நிகழ்ச்சி நிரல் பதிவு செய் யப்பட்ட விவரங்களையும் அறிவிப்பு பலகை யின் மூலம் வைக்கிறோம்” என்று ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவலிங்கம் உள்ளிட்டோர் எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தனர். 15 ஆண்டுக ளாக தலித் மக்களுக்கு கொடுக்காத சமுதாய கூடத்தை, தலித் மக்கள் பயன்படுத்தி கொள்ள அனுமதியையும் இந்த பேச்சுவார்த்தையின் மூலம் மார்க்சிஸ்ட் கட்சி பெற்றுகொடுத்தது. இதனடிப்படையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் தற்காலி கமாக ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக இப்பேச்சுவார்த்தையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி, தாலுகா செயலா ளர் ஏ.முருகேசன், தாலுகாக்குழு உறுப்பினர் சி.மாரிமுத்து, கே.பெரியண்ணன், கிளை செயலாளர் சி.கருப்பண்ணன், சிஐடியு போக் குவரத்து சங்க இ.தங்கமலை, திராவிட கழக மாவட்டச் செயலாளர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்ட அறிவிப் பால், தலித் ஊராட்சி மன்ற தலைவரை நாற் காலியில் அமரவைத்ததும், தலித் மக்க ளின் பயன்பாட்டிற்கு சமூதாயக்கூடத்தை பயன்படுத்த ஒப்புதல் பெற்றதும் அரசியலா ளர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் கவ னத்தை ஈர்த்துள்ளது.