districts

குறுகலான சாலைக்கு வழிகாட்டும் ‘கூகுள் மேப்’

நாமக்கல், மே 16- பள்ளிபாளையத்தில் குறுகலான  சாலைக்கு வழிகாட்டும் கூகுள் மேப் பால், கனரக வாகன ஓட்டிகள் அவதி  அடைந்து வருகின்றனர். தொலைதூரப் பயணங்கள் மேற் கொள்வோர் செல்போனில் உள்ள  கூகுள் மேப் ஆப்பை பயன்படுத்து கின்றனர். அதாவது நாம் செல்ல வேண்டிய இடத்தை கூகுள் மேப்  ஆப்பில் பதிவிட்டால் அது எவ்வழி யாக செல்ல வேண்டும், எவ்வளவு தூரங்கள் உள்ளது, எத்தனை மணி  நேரத்தில் சென்று விடுவோம் உள் ளிட்ட விவரங்களை தந்துவிடும். பெரும்பாலானோர் இதை பயன்ப டுத்தி வரும் நிலையில், வாடகை கார்  ஓட்டுனர்கள், சரக்குகளை ஏற்றிச் செல்லும் கனரக லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு அதிகளவு பலன் கொடுக்கும் வகையில், இந்த கூகுள்  மேப் ஆப் செயல்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் ஒரு சில நேரங்க ளில் கூகுள் மேப்பின் தவறான வழி காட்டுதலால் வாகன ஓட்டிகள் விபத் துக்குள்ளாவது உள்ளிட்ட சம்பவங்க ளும் நடைபெற்று வருகிறது. இதனிடையே, நாமக்கல் மாவட் டம், பள்ளிபாளையத்தில் சாலை விரி வாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக் கும் பணிகளுக்காக பல்வேறு பகுதி கள் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. ஈரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் பள்ளிபா ளையம் பாலம் வழியாக ஒட்ட மெத்தை பகுதிக்கு சென்று அதன் வழியாக குமாரபாளையம் சென்று வந்தன. பிரதான சாலையில் மேம் பால தூண்கள் மற்றும் சாலை விரி வாக்கப்பணிகள் சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், குமார பாளையத்திற்கு செல்லும் பிரதான  சாலை தற்போது  சீரமைக்கபட்டுள் ளது. இந்நிலையில், கூகுள் மேப்பின்  தவறான வழிகாட்டுதலால், இரவு  நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள்,  பள்ளிபாளையம் நால்ரோடு பகுதி யில் உள்ள ராஜவீதி என்ற சாலையில்  புகுந்து குமாரபாளையம் செல்வது  அதிகரித்துள்ளது. மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து பள்ளி பாளையத்திற்கு வரும் வாகன  ஓட்டிகள் கூகுள் மேப் வழிகாட்டு தலின்படி வருகிறார்கள். ஆனால், கூகுள் மேப் குறுகலான சாலைக்கு வழிகாட்டுவதால் வாகன ஓட்டிகள் தவிப்பு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து உள்ளூர் பகுதியைச்  சேர்ந்த வாகன ஓட்டிகள் கூறுகை யில், பள்ளிபாளையம் நால்ரோடு பகு தியிலிருந்து எதிர் திசையில் ராஜ வீதி சாலை வழியாக சென்றால், குமாரபாளையம் செல்வது எளிதான  ஒன்றாகும். ஆனால், இது மிகவும் குறுகலான சாலை என்பதால் அதிக பட்சம் கார் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே செல்லக்கூடிய வகையில்  இந்த சாலை உள்ளது. ஆனால்,  கூகுள் மேப்பில் இந்த சாலை பிரதான  சாலை போல தெரிவிக்கப்பட்டு இருப்பதால், புதிதாக ஊருக்குள் இரவு நேரத்தில் கனரக லாரிகள் அதி களவு இந்த சாலையில் வந்து வளை வில் திரும்பும்போது மாட்டிக் கொள் கிறது. இதுகுறித்து நாங்கள், “குறுக லான சாலையில் ஏன் வருகிறீர்கள்?” என அவர்களிடம் கேட்டாலும், கூகுள் மேப் வழிகாட்டுதல் படி தான்  வந்தோம். ஆனால், அதில் சாலை யின் அகலம் உள்ளிட்ட பல்வேறு விவ ரங்கள் ஏதும் இல்லாததால், இவ்வா றாக மாட்டிக் கொண்டதாக தெரி விக்கின்றனர். அதனைத்தொடர்ந்து பல வாகனங்கள் வருவதால் இரவு நேரத்திலும் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. பள்ளிபாளையம் சாலையில் இருந்து ஒட்டமெத்தை வழியாக குமா ரபாளையம் செல்ல வேண்டிய நிலை யில், கூகுள் மேப் ராஜவீதி சாலை வழி யாக செல்ல வேண்டுமென தெரிவிப் பதால் பெரும்பாலான வாகன ஓட்டி கள் இந்த குறுகலான சாலையில் புகுந்து விடுகின்றனர். தகவல் தொழில்நுட்பம் நமக்கு அதிகளவு பயன் அளித்தாலும், இதுபோன்ற நேரங்களில் நம்மை தவிக்க விடுகி றது என்பதே நிதர்சனமான உண்மை யாக உள்ளது. ‘கூகுள் மேப் ஆப்’ நிர் வாகிகள் அவ்வப்போது ஊரில் ஏற்ப டும் மாற்றங்களை பதிவு செய்து, அதற்கேற்ற வகையில் மேப்பை அப் டேட் செய்ய வேண்டும். அப்போது தான் இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும். பாலப் பணிகள்  முடியும் வரையில் பள்ளிபாளையத் திற்கு வாகன ஓட்டிகள் கவனமாக வந்து செல்ல வேண்டும், என்றனர்.

;