தருமபுரி, செப்.20- தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தின் கீழ் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு அளித்தனர். இந்நிகழ்வில் உதவி திட்ட அலுவலர் (உட்கட்ட மைப்பு) உஷாராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவல்லி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.