districts

பசுந்தேயிலை விலை சரிவு: விவசாயிகள் கவலை

உதகை, ஜூலை 17- நீலகிரியில், பசுந்தேயிலை விலை  கிலோவுக்கு ரூ.12 ஆக குறைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ள னர். நீலகிரி மாவட்டத்தின் பிரதான விவ சாயமாக தேயிலை திகழ்கிறது. நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தை மேம் படுத்துவதில் தேயிலை விவசாயம் முக் கிய இடத்தை பிடிக்கிறது. தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக்கழகம் மூலம் 4  ஆயிரத்து 311 ஹெக்டர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இது தவிர கூடலூர், பந்தலூர் தாலுகாக் களில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரிலும், குன் னூர், கோத்தகிரி, குந்தா தாலுகாக்க ளில் 45 ஆயிரம் ஏக்கரிலும் தேயிலை பயி ரிடப்பட்டுள்ளது. இதேபோல் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகா பகுதிகளில்  சட்டப்பிரிவு-17 மற்றும் வருவாய் நிலங் களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தேயிலை பயிரிட்டுள்ளனர். தினமும் தோட்டங்களில் விளையும் பசுந்தேயி லையை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். தொடர்ந்து 180 தனியார் தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் 15 கூட்டுறவு தேயிலை தொழிற் சாலைகளில் கொள்முதல் செய்யப்படு கிறது. பின்னர். தேயிலைத்தூள் உற் பத்தி செய்யப்படுகிறது. இதற்கிடையே பசுந்தேயிலைக்கு மாதந்தோறும் விலை நிர்ணயம் செய் யப்படுகிறது. அதன்படி நடப்பு மாதத் தில் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.12 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத னால் விவசாயிகள் கவலை அடைந்துள் ளனர். மேலும், மாதந்தோறும் விலை குறைந்து வருவதால் பராமரிப்பு மற்றும் அறுவடை உள்ளிட்ட செலவினங்களை ஈடுசெய்ய முடியாத வகையில் உள் ளது என புலம்பி வருகின்றனர். கூடலூர் சாலீஸ்வரி கூட்டுறவு தேயிலை தொழிற் சாலையில் விவசாயிகள் வழங்கக் கூடிய பசுந்தேயிலைக்கு கடந்த மாதத்தை விட ரூ.2 விலை குறைந் துள்ளது. இதேபோல் மாவட்டம் முழு வதும் உள்ள தொழிற்சாலைகளில் பசுந் தேயிலைக்கு ரூ.12 விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.  இதுகுறித்து தேயிலை விவசாயிகள்  கூறுகையில், கடந்த மாதம் கிலோ ரூ.14 ஆக இருந்தது. தற்போது மீண்டும் விலை குறைக்கப்பட்டுள்ளது. எனவே,  பசுந்தேயிலைக்கு நிரந்தரமாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மாதந்தோ றும் இறங்குமுகத்தில் விலை உள்ள தால், தேயிலை விவசாயம் தொடர்ந்து  நலிவடையும். அதனால் அதிகாரிகள் தேயிலை விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற னர்.