திருப்பூர், மே 15- ரேஷன் கடை பணியாளர்க ளுக்கு இரட்டிப்பு அபராத கட்ட ணத்தை அரசு திரும்பப் பெற வேண் டும் என்று திருப்பூர் மாவட்ட கூட்டு றவு பணியாளர் சங்கம் வலியுறுத் தியுள்ளது. திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணி யாளர் சங்க நிர்வாகக் குழு கூட்டம் திங்கட்கிழமை மாவட்டத் தலைவர் பி.கௌதமன் தலைமையில் சிஐ டியு அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நியாய விலைக் கடை களுக்கு அனுப்பப்படும் பொருட்கள் தரமான நல்ல கோணிப் பைகள் மூலமே அனுப்பப்பட வேண்டும். பிளாஸ்டிக் சாக்குகளில் அனுப்பு வதை தவிர்க்க வேண்டும். நியாய விலைக் கடைகளுக்கு ரேஷன் பொருட்கள் கொண்டு செல் லும் போது அனைத்து லாரிகளி லும் எடை தராசு வைத்து விற்பனை யாளர்கள் முன்னிலையில் எடை யிட்டு சரியான அளவில் மூட்டைகள் இறக்க வேண்டும். தமிழக அரசு விதித்துள்ள அபராத தொகை இரட்டிப்புக் கட்டணத்தை அரசு திரும் பப் பெற வேண்டும். நியாயவிலைக் கடைகளில் பழுதாகும் பி .ஓ. எஸ். இயந்திரத்திற்கு விற்பனையா ளர்களை பொறுப்பாக்கி பணம் வசூல் செய்வதை கைவிட வேண் டும். மளிகைப் பொருட்களின் தேவைப் பட்டியல் பெற்று விற்ப னையாளர்களால் கோரப்படும் பொருட்களை மட்டுமே இறக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் வெளி மாவட்ட மக்கள் அதிகம் வசிப்பதால் பெயர்வு விற்பனை மூலம் பொருட் கள் விநியோகம் செய்வதற்கு ஏது வாக அனைத்து பொருட்களும் 100% நியாய விலைக் கடைகளுக்கு ஒதுக் கீடு செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் இயங்கும் நியாய விலைக் கடைகளில் ஒரே பணியாளர்கள் இரண்டு நியாய விலைக் கடைக ளில் பணி செய்வதை தவிர்த்து காலி யாக உள்ள விற்பனையாளர் பணி யிடத்தை உடனடியாக நிரப்ப வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, இக்கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.மகேந்திரன், மாவட்டப் பொரு ளாளர் பி.சுரேஷ், மாவட்டத் துணைத் தலைவர் வே. கருப்புசாமி, துணைச் செயலாளர் கே.எம்.சரவண மூர்த்தி மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.