கோவை, நவ.24– மலைப்பகுதிகளில் பணியாற் றும் ஆசிரியர்களுக்கு மலை வாழ்படி வழங்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் தற் போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மலைப்பகுதி களில் உள்ள ஆசிரியர்களுக்கு மலைவாழ்படி வழங்கப்பட்டு வந்தது. தமிழகத்தின் முதல்வராக எம்.ஜி.ராமச்சந்திரன் இருந்த போது இந்த ஆணை பிறப்பிக்கப் பட்டு நடைமுறையில் இருந்தது. இந்த படியை தற்போது கோவை மாவட்டத்தில் வால்பாறை உள் ளிட்ட பகுதிகளிலுள்ள ஆசிரியர் கள் பெற்று வருகின்றனர். அதே நேரம், கோவை மாவட்டத்தி லுள்ள மற்றொரு பகுதியான கார மடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு மலைவாழ்படி வழங்கப்படவில்லை. கடந்த 35 ஆண்டுகளாக இந்த மலைவாழ் படியை பெறமுடியாமல் ஆசிரியர் கள் சட்ட நடவடிக்கைக்கும் சென்ற னர். இருப்பினும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. இந்நிலை யில், கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜனை அண் மையில் சந்தித்த ஆசிரியர்கள் சிலர் மேற்குறிப்பிட்ட பிரச்சனை தொடர்பாக அவரது கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனையடுத்து கடந்த அக்.29 ஆம் தேதியன்று கோவை மாவட்ட ஆட்சியரை, பி.ஆர்.நடராஜன் எம்.பி., சந்தித்து மலைப்பகுதி களில் பணியாற்றும் ஆசிரியர்க ளுக்கு மலைவாழ்படி வழங்கப்பட வேண்டும். இதற்கான உரிய நடவ டிக்கையை விரைந்து எடுக்க வேண் டும் என வலியுறுத்தினார். மேலும், இத்துறை சார்ந்த பல்வேறு தரப் பினருக்கும் கடிதம் எழுதி, அவர் களின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் தொடர்ந்து வலியு றுத்தி வந்தார். இந்நிலையில் கார மடை வட்டார கல்வி அலுவலர் தற்போது வெளியிட்டுள்ள ஆணை யில் காரமடை வட்டாரத்தில் பரளி உள்ளிட்ட பள்ளிகளில் உள்ள ஆசி ரியர்களுக்கு மலைவாழ்படி வழங் குவதற்கான ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதன்படி இப்பகுதி களில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் மாதம் ரூ 6 ஆயி ரம் ரூபாய் மலைவாழ்படியை பெறுவது உறுதியாகி உள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறு கையில், 35 ஆண்டுகால போராட் டத்திற்கு தற்போது தீர்வு ஏற்பட் டுள்ளது. இப்பகுதி நீலகிரி நாடா ளுமன்ற தொகுதிக்குள்தான் வரு கிறது என்றாலும், பொதுவுடமை கட்சியின் பிரதிநிதி அனைவருக் குமானவர் என்பதால் நாங்கள் அவரை அணுகினோம். அவர் உட னடியாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து எங்களின் கோரிக் கைகளை கவனத்திற்கு கொண்டு சென்றார். மேலும் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றார். தற்போது இது அரசு ஆணையாக பிறப் பிக்கப்பட்டுள்ளது. இது உண்மை யில் எங்களுக்கு மகிழ்ச்சியளிக் கிறது என்றனர்.
இதுகுறித்து பி.ஆர்.நடராஜன் எம்பி கூறுகையில், காரமடை வட் டாரத்தில் மலைப்பகுதியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு மலை வாழ்படி வழங்கப்படவில்லை என் பதை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந் தனர். உடனடியாக இதனை கோவை மாவட்ட ஆட்சியர் உள் ளிட்ட அதிகாரிகளின் கவனத் திற்கு கொண்டு சென்றேன். தற் போது அதற்கான ஆணை பிறப் பிக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். கல்வித்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை வரவேற் கிறேன். இதேபோல் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் கவனத் திற்கு வராத பல பள்ளிகள் உள்ள தாக அறிகிறேன். உடனடியாக மாவட்ட ஆட்சியர், கல்வித்துறை அதிகாரிகளிடம் கலந்து விவா தித்து அனைத்து மலைப்பகுதி யில் உள்ள பள்ளிகளில் பணி யாற்றும் ஆசிரியர்களுக்கு இந்த மலைவாழ்படி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்து கிறேன் என்றார்.