சேலம், ஜூலை 25- பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைப் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. அரசு ஊழியர் சங்கத்தின் ஜூலை 2 எழுச்சி நாளை முன் னிட்டு, ஜாக்டோ-ஜியோ கோட்டை முற்றுகை போராட்டத்தை அறிவித் திருந்த நிலையில், அமைச்சர்கள் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், அரசு துறை களில் காலியாக உள்ள பணியி டங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். நிரந்தர பணியிடங் களை அழித்திடும் அரசாணை களை உடனடியாக ரத்து செய்திட வேண்டும். காலை சிற்றுண்டி திட் டத்தை சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். பழைய ஓய் வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்ற வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. சேலத்தில், கோட்டை மைதா னத்தில் துவங்கிய பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவ டைந்தது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ந.திருவேரங்கன் தலைமை ஏற்றார். முன்னாள் மாநிலத் துணைத்தலைவர் கோ. சுகுமார் பேரணியை துவக்கி வைத் தார். இதில், அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைப் பொதுச் செய லாளர் மு.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் சுரேஷ், வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநிலத் துணைத்தலைவர் வெ.அர்த்த னாரி, ஊரக வளர்ச்சித் துறை அலு வலர் சங்க மாவட்டத் தலைவர் பி.ஜே.கண்ணன் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து உரையாற் றினர். முடிவில், மாவட்டப் பொரு ளாளர் பி. செல்வம் நன்றி கூறினார். இதில் திரளானோர் பங்கேற்றனர்
தருமபுரி
இதேபோல், தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வலி யுறுத்தி தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன் துவக்கி வைத்தார். இதில், மாநிலத் துணைத்தலைவர் கோ.பழனியம் மாள், மாவட்டச் செயலாளர் ஏ. சேகர், மாவட்டத் தலைவர் எம். சுருளிநாதன், ஜாக்டோ-ஜியோ மாவட்ட நிதிகாப்பாளர் கே. புகழேந்தி, சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் பெ.மகேஸ் வரி, மாவட்டத் தலைவர் சி. காவேரி, ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.பெரு மாள் உள்ளிட்டோர் உரையாற் றினர். இதில், திராளான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு
இதேபோல், ஈரோடு மாநகர் காளை மாடு சிலை அருகிலிருந்து பேரணி துவங்கியது. பேரணிக்கு மாவட்டத் தலைவர் அ.ராக்கி முத்து தலைமை வகித்தார். டிஎன்ஆர்ஓஏ மாநில துணைத் தலைவர் கு.குமரேசன் பேர ணியை தொடங்கி வைத்தார். வட் டாட்சியர் அலுவலக வளாகத்தில் பேரணி நிறைவுற்றது. கோரிக்கை களை விளக்கி மாவட்ட செயலாளர் ச.விஜயமனோகரன், முன்னாள் மாவட்டச் செயலாளர் என்.மணி பாரதி ஆகியோர் நிறைவுரையாற் றினார். மாவட்டப் பொரு ளாளர் ஆர்.சுமதி நன்றி கூறினார். பேரணியில் திரளானோர் பங்கேற் றனர்.
கோவை
கோவையில், மகளிர் பாலி டெக்னிக் கல்லூரி முன்பு பேரணி துவங்கி, டாக்டர் பாலசுந்தரம் சாலை ஆர்டிஓ அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. பேரணிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ச. ஜெகநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செந்தில் குமார் பேரணியை துவக்கி வைத் தார். சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் சி.என்.ராம சாமி, ஓய்வூதியர் சங்க செயலாளர் எஸ்.மதன் ஆகியோர் வாழ்த்து ரையாற்றினர். வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செய லாளர் ஆர்.மகேஸ்வரன் நிறை வுரையாற்றினார். முடிவில், எஸ்.எம்.வேலுமணி நன்றி கூறி னார்.