districts

img

பேட்டரிகள் இல்லாத அரசு பேருந்துகள் -ஓட்டுநர்கள், பயணிகள் அவதி

உடுமலை, டிச.1-  உடுமலை அரசு போக்குவரத்து பணி மனையில் இருந்து இயக்கப்படும் பேருந்து களில் பேட்டரிகள் இல்லாததால் ஓட்டுநர் கள், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.   உடுமலை அரசு போக்குவரத்து பணி மனையில் இருந்து உள்ளூர், வெளியூர் களுக்கென சுமார் 108 பேருந்துகள் இயக் கப்பட்டு வருகின்றது. இதில் சுமார் இரு பதுக்கும் மேற்பட்ட பேருந்துகளில் பேட்டரி இல்லை. இதனால் காலை பணி மனையில் இருந்து போக்குவரத்தை ஓட்டு நர்கள் எடுக்கும் போது அங்கு பணி புரியும் தொழில்நுட்ப ஊழியர்கள் போக்கு வரத்தை இயக்கி தருகிறார். பின்னர், இந்த  பேருந்துகளை எப்போதும் ஆப் செய்யா மல் ஓட்டுநர்கள் இயக்கி வருகின்றனர். அப் படி ஆப் செய்தால், அந்த பேருந்துகளை மீண்டும் இயக்கிட பயணிகள் மற்றும் நடத் துனர்கள் இறங்கி தள்ளும் நிலை உள்ளது. இதனால் ஓட்டுநர்கள் இந்த பேருந்துகளை காலை முதல் இரவு  பணிமனைக்கு வரும் வரை எப்பொழுதும் ஆப் செய்வது இல்லை.  இதன் காரணமாக தினமும் அதிகப் படியான டீசல் வீணாகிறது. தற்பொழுது டீசல் விலை கடுமையாக உயர்ந்து உள்ள நிலையில், ஒரு பணிமனையில் மட்டும் இரு பதுக்கும்  மேற்பட்ட பேருந்துகள் பேட்டரி இல்லாமல் இயக்கி வருவதால் போக்கு வரத்து கழகத்திற்கு பெரும்  இழப்பை ஏற்படுத்தி வருகிறது.

;