districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கருவலூர் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

அவிநாசி, செப்.4- அவிநாசி அருகே உள்ள கருவலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.  திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சியில் கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந் துள்ளது. இப்பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப் பள்ளியைச் சேர்ந்த முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) பிரபா வதிக்கு, தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.  இதனால் கருவலூர் பள்ளிக்கு பெருமை அடைந்துள்ளது.  அத்துடன் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், பொது மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோர் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர். மேலும் ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித் துள்ளனர்.

திருப்பூரில் இன்று மின்தடை 

திருப்பூர் செப். 4 -  திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, 15 வேலம் பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர  பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் மின் விநி யோகம் நிறுத்தப்படுகிறது. செப். 5 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல்  மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா: பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், ஸ்ரீராம் நகா், பெரியாயிபாளையம், கே.ஆா்.சி.அமிா்தவா்ஷினி நகா், கே.ஆா்.சி.பிருந்தாவன் நகா், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சபாளையம், பொங்குபாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்க முத்தூா், நல்லாத்துப்பாளையம், அய்யம்பாளையம், ஆயிக் கவுண்டம்பாளையம், அம்மாபாளையம் ஒரு பகுதி.  15.வேலம்பாளையம்: ஆத்துப்பாளையம், அனுப் பர்பாளையம், திலகா் நகா், அங்கேரிபாளையம், பெரியாா் காலனி, அம்மாபாளையம், அனுப்பா்பாளையம்புதூா், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகா், தண்ணீா் பந்தல் காலனி,  ஏ.வி.பி.லே அவுட், போயம்பாளையம், கணபதிநகர், சக்தி  நகா், நந்தாநகர், அவினாசி நகர், நஞ்சப்பா நகர், பிச்சம்  பளையம், ராஜா நகர், கங்கா நகர், பழனிச்சாமி நகர் ,  பாண்டியன் நகா், நேரு நகா், குருவாயூரப்பன் நகா்,  நஞ்சப்பா நகா், லட்சுமி நகா், இந்திரா நகா், பிச்சம் பாளையம் புதூா், குமரன் காலனி, செட்டிபாளையம், சோளி பாளையம், கருப்பராயன் கோயில் பகுதி, திருமுருகன் பூண்டி, துரைசாமி நகா், பெரியாயிபாளையம் ஒரு பகுதி,  பள்ளிபாளையம், விஜிவி நகா், அணைப்புதூா் மற்றும்  டிடிபி மில் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்.

ரூ.1.6 கோடிக்கு பருத்தி ஏலம்

தாராபுரம், செப். 4- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஞாயி றன்று ரூ.1.6 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. திருப்பூர் மாவட்டம், மூல னூர் ஒழுங்குமுறை விற் பனைகூட முதுநிலை செய லாளர் ஆர்.பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது,  மூலனூர் ஒழுங்குமுறை  விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக  ஏலம் நடைபெற்றது. இதில்  திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை  சேர்ந்த 630 விவசாயிகள்  பருத்தியை விற்பனைக்காக  கொண்டு வந்திருந்தனர்.  அதேபோல், பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத் தில் பங்கேற்றனர். அதிக பட்ச விலையாக குவிண் டால் ஒன்றிற்கு ரூ. 11 ஆயி ரத்து 112க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.8  ஆயிரத்து 50க்கும், சராசரி  விலையாக ரூ. 9 ஆயிரத்து  650 க்கும் ஏலமாகி உள்ளது.  மொத்தம் 5489 மூட்டை கள் 1 ஆயிரத்து 757 குவிண் டால் பருத்தியை ரூ. 1 கோடி யே 66 லட்சத்து 74 ஆயிரத்து  594 க்கு விற்பனையானது.  இந்த ஏலத்தில் 14 வணி கர்கள் பங்கேற்றனர். ஏலத் திற்கான ஏற்பாடுகளை கண் காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

சாலை விபத்தில் விவசாயி பலி

தாராபுரம், செப். 4- தாராபும் அருகே சாலை விபத்தில் விவசாயி சம்பவ  இடத்திலேயே உயிரிழந் தார். தாராபுரம் அருகே உள்ள  ஆச்சியூரை சேர்ந்தவர் ராம சாமி (65) விவசாயி. இவர்  தாராபுரத்தில் இருந்து ஆச்சி யூர் செல்வதற்காக மோட் டார் சைக்கிளில் தாராபுரம்  பைபாஸ் சாலையில் சென்று  கொண்டிருந்தார். அப் போது ஆச்சியூர் பிரிவு  சாலையை கடக்க முயன்ற போது திண்டுக்கல்லில்  இருந்து தாராபுரம் நோக்கி வந்த வேன் மோதியதில் படு காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார்.  இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் வேகத்தடை அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

கோவை, செப்.4- துடியலூர் அருகே முன்னாள் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். கோவை மாவட்டம், துடியலூரை அடுத்த தொப்பம் பட்டியை சேர்ந்தவர் முப்புடாதி (64). முன்னாள் தனியார் வங்கி மேலாளரான இவர் வீட்டை பூட்டிவிட்டு  குடும்பத்துடன் மதுரைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து, அறையிலிருந்த நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இந்நிலையில், வீடு திரும்பிய முப்புடாதி கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்த  போது அறையில் இருந்த பீரோவை உடைத்து, 7 பவுன் நகை  மற்றும் பணம் ரூ.10 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர் கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முப்புடாதி துடியலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை

கோவை, செப்.4- சோமனூர் அருகே வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (34). இவர் கோவை சோமனூர் பகுதியில் தங்கி அங்குள்ள மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் சுரேஷ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறி, அவர் கள் கடந்த 4 மாதங்களாக திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதனிடையே இருவருக்கு அடிக்கடி தக ராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அந்த இளம்பெண் கோபித்து கொண்டு சுரேஷ்குமாரை பிரிந்து சென்றார். இதனால் அவர் கடந்த சில நாட்களாக  மனவேதனையுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுரேஷ்குமார் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அப் பகுதி பொதுமக்கள் கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் சம் பவ இடத்துக்கு வந்து சுரேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்

நாமக்கல், செப்.4- பரமத்திவேலூர் அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே ஓலப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பாரதி நகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையின் குறுக்கே மழைநீர் வெளியேறும் வகையில் குழாய் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சாலையின் குறுக்கே இருந்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் பாரதி நகர் பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மழைநீரை அகற்றகோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த பாரதி நகர் பொதுமக்கள் பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் வீரம்மாள், ஓலப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கனகுமயில்சாமி ஆகி யோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதையடுத்து குழாயில் ஏற்பட்ட அடைப்பு அகற்றப்பட்டு அப்பகுதியில் தேங்கி நின்ற மழைநீர் வெறியேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

உதகை, செப்.4- 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர். நீலகிரி மாவட்டம், குன்னூரை அடுத்துள்ள உலிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் காட்வின் (22). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவ னத்தில் மேற்பார்வையாளராக பணி யாற்றி வந்தார். இவர் விடுமுறை நாட்க ளில் சொந்த ஊர் சென்று வந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காட்வின் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலி யல் பலாத்காரம் செய்துள்ளார். இத னால் பயந்துபோன சிறுமி இதுகுறித்து வீட்டில் யாரிடமும் எதுவும் தெரிவிக்க வில்லை. இதற்கிடையே அந்த சிறுமி 7 மாதம் கர்ப்பம் அடைந்தார். இதனால் உடல்நல கோளாரால் பாதிக்கப்பட்டு வந்த சிறுமி இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து இரு வீட்டு பெற்றோரும் கூடி பேசி இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். மேலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது. இதுகுறித்து மாவட்ட சமூக நல அலுவலர் பிரசன்ன தேவிக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சமூக நலத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இருவிட்டு பெற்றோரிடம் பேசி 18 வயது பூர்த்தியடையாத பெண்ணுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்று கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும், இதுகுறித்து குன் னூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரின்பேரில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காட்வினை சிறையில் அடைத்தனர்.

பட்டுக்கூடுகள் ஏலம்

தருமபுரி, செப்.4- தருமபுரி பட்டு வளர்ச்சி  துறை சார்பில் செயல்பட்டு  வரும் பட்டுக்கூடுகள் ஏல அங் காடிக்கு பல்வேறு மாவட்டங் களில் இருந்து விவசாயி கள் 3,454 கிலோ பட்டுக்கூடு களை விற்பனைக்கு எடுத்து வந்தனர். ஒரு கிலோ பட்டுக் கூடு அதிகபட்சமாக ரூ.690க்கும், குறைந்தபட்ச மாக ரூ.328-க்கும், சராசரி யாக ரூ.535.06-க்கும் விற்ப னையானது. மொத்தம் ரூ.18 லட்சத்து 48 ஆயிரத்து 599 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற் பனை செய்யப்பட்டது.

மழையால் மலைகிராம சாலைகள் சேதம்

ஈரோடு, செப்.4- ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், மலை  கிராம சாலைகள் சேறும், சகதியுமாக மாறியுள்ளதால், அப் பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கடம்பூர் அருகே உள்ள மாக்கம்பாளை யம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் குரும்பூர் பள்ளம், சக்கரை பள்ளம் ஆகிய 2 காட்டாறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடு கிறது. சத்தியமங்கலத்தில் இருந்து மாக்கம்பாளையம் செல் லும் அரசு பேருந்து அருகியம் வரை மட்டும் சென்று வந் தது. அங்கு பயணிகள் இறங்கி தங்கள் குழந்தைகளை தலை யில் தூக்கி வைத்து கொண்டு சென்றனர். பலர் ஒருவருக் கொருவர் கைகளை கோர்த்து கொண்டு ஆபத்தை உணரா மல் காட்டாற்றை கடந்து சென்றனர். மேலும், சேதமான பகுதி களை பார்வையிட சத்தியமங்கலத்தில் இருந்து மாக்கம் பாளையம் சென்று கொண்டிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் சென்ற வாகனம் சக்கரைபள்ளத்தில் சேற்றில் சிக்கிக்கொண்டது. இதையடுத்து அங்கிருந்த மலை கிராம மக்கள் டிராக்டரில் கயிறு கட்டி காரை பின்னால் இழுத்து சென்று கடம்பூரில் விட்டனர். தொடர்ந்து 2 காட்டாறுகளிலும் வெள்ளம் இருபுறமும் கரையை தொட்டு சென்றதால் அதிகளவில் மலை கிராம சாலையில் சேறும், சகதியும் படிந்திருந்தது. இதனால் பொது மக்கள் குரும்பூர் பள்ளத்தில் மண்ணை கொட்டி சமன் செய்த னர். அதன்பின்னரே சத்தியமங்கலத்தில் இருந்து மாக்கம் பாளையம் செல்லும் பேருந்து குரும்பூர் பள்ளத்தை கடந்து சென்றது. எனவே, இப்பகுதி சாலைகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வியாபாரிகளை தாக்கி பணம் பறிப்பு

உதகை, செப்.4- திருச்சியிலிருந்து உதகை வந்த இரண்டு வியாபாரிகளை அரிவாளால் தாக்கி, ரூ.30 லட்சம் பறித்து சென்ற கும்பலை  காவல் துறையினர் பிடித்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர்  தங்கராஜ் (55). இவரது மகன் யுவராஜ் (25). இவர்கள் இரு வரும் உதகையில் இருந்து திருச்சிக்கு காய்கறி அனுப்பும் வியாபாரிகளுக்கு சேர வேண்டிய பணத்தை திருச்சியில் வசூல் செய்து ஞாயிற்றுக்கிழமை உதகையில் கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். அதேபோல சனியன்று இரவு ரூ.30 லட் சத்துடன் பேருந்தில் உதகை வந்த நிலையில், அவர்களை பின் தொடர்ந்து காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு பணப்பையுடன் தப்பி சென்றனர். அதிகாலை நேரத்தில் ஆள் நடமாட்டம்  இல்லை என்ற நிலையில் அங்கிருந்த சிலர் காவல்துறையின ருக்கு தெரிவித்த தகவலின் அடிப்படையில் உதகையில் இருந்து வெளி மாவட்டம் செல்லும் அனைத்து சாலைகளி லும் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு தீவிரப் படுத்தப் பட்டது. இதில் குன்னூர் அருகே அருகே காட்டேரி பகு தியில் அந்த கார் பிடிபட்டது. காரிலிருந்த மூன்று பேர் கைது  செய்யப்பட்டதோடு, பணமும் கைப்பற்றபட்டது. தொடர்ந்து பிடிபட்ட மூவரும் விசாரணைக்கு உதகைக்கு அழைத்து செல் லப்பட்டனர். இதனிடையே காயமடைந்த இருவரும் உதகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அனுமதிக்கப் பட்டுள்ளனர்.



 

;