கோவை, நவ. 25 – மத்திய தொழிற்சங்கங்களின் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவையில் மத்திய, மாநில, பொதுத்துறை ஓய்வூதியர் சங்கத் தின் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை பிஎஸ்என்எல் அலுவலக வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். வேலை நிறுத்த போராட்டத்தின் அவசியம் குறித்து அஞ்சல் அரங்கத்தின் நிர்வாகி கருணாநிதி உரையாற்றினார். இதில் ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்வாகிகள் சந்திரன், குடியரசு உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்று மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பி னர்.