districts

img

திருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் பொது மருத்துவ முகாம்

திருப்பூர், செப். 25 - இந்திய விடுதலைப் போராட்ட தியாகி  மாவீரன் பகத்சிங்கின் 115 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் குமரா னந்தபுரம் வடக்கு கிளை சார்பில் இலவச பொது மருத்துவம் மற்றும் ரத்த வகை கண்ட றியும் முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. அங்குள்ள கஸ்தூரி அம்மன் திருமண  மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு  வாலிபர் சங்கத்தின் கிளை துணைத் தலைவர்  எஸ்.ராஜேஷ் தலைமை தாங்கினார். வாலிபர்  சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன் முகாமை துவக்கி வைத்தார். குமரன்  மருத்துவமனை நிர்வாக இயக்குனர் செந்தில் குமரன் தலைமையில், பொது மருத்துவர் பாக்யராஜ், மருத்துவர் குமாரசாமி உட்பட  நான்கு மருத்துவர்கள் பங்கேற்று மக்க ளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து  சிகிச்சை அளித்தனர். 10 செவிலியர்கள்,  ஒரு மருந்தாளுனர் பங்கேற்று முகாமை நடத்தினர். வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர்  எஸ்.அருள், மாவட்டச் செயலாளர் செ. மணிகண்டன், கிளைத் தலைவர் பி.முத்து,  எம்.ஜீவானந்தம், கே.கணேசன் உள்ளிட் டோர் முகாம் துவக்க விழாவில் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன்,  மாமன்ற உறுப்பினர்கள் வீ.ராதா கிருஷ்ணன், கே.பத்மாவதி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.மைதிலி, மாநகரக் குழு உறுப்பினர்கள் எஸ். ராஜேந்திரன், பா.சௌந்தரராசன், பொன்.  பாலகுமாரன், வாலிபர் சங்க முன்னாள் நகர  தலைவர் டி.நாகராஜன் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்று வாழ்த்து தெரிவித் தனர். முகாமில் சுமார் 200 பேர் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு மருந்து, மாத்திரைகள் பெற்றுச் சென்றனர். நிறைவாக எஸ். ஆறுமுகம் நன்றி கூறி னார்.

;