districts

போலி சினிமா தயாரிப்பாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

போலி சினிமா தயாரிப்பாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது கோவை, மே 14- பல வழிகளில், பலரை ஏமாற்றி, பல கோடி ரூபாய் மோசடி  செய்த போலி சினிமா தயாரிப்பாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கரூர் மாவட்டம், பரமத்தி நல்லிபாளையத்தைச் சேர்ந்த வர் பார்த்திபன். படிப்பிற்காக கோவைக்கு வந்த இவர், கடந்த  2013 ஆம் ஆண்டு பாலக்காட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை  திருமணம் செய்தார். அவரிடம் இருந்த பல லட்சம் ரூபாய்  மதிப்பிலான  நகைகள் மற்றும் பணத்தை தொழிலில் முத லீடு செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றினார். அதே நேரத்தில் பார்த்திபனுக்கு ஏராளமான பெண்களுடன் தொடர்பு இருந்தது, அவரது மனைவிக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பணத்திற்காக தன்னை ஏமாற்றியதை உணர்ந்த அந்த பெண், கடந்த 2015 ஆம் ஆண்டு பாலக்காடு  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீ சார் பார்த்திபன் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்ப திவு செய்தனர். தொடர்ந்து பார்த்திபனை கைது செய்து சிறை யில் அடைத்தனர். இதேபோன்று, கடந்த 2020 ஆம்  ஆண்டு  நாமக்கல்லைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை அரசு அதிகாரி  எனக்கூறி, திருமணம் செய்து, அவரிடம் இருந்து நகை  பணம் ஆகியவற்றை திரைப்படத்தில் முதலீடு செய்வதாக கூறி ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து அந்த இளம் பெண் வட வள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில்  போலீசார் பார்த்திபன் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவ ரையும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத் தனர். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த பார்த்தி பன் சினிமா தயாரிப்பாளர் என்றுக்கூறி பலரை ஏமாற்றி பணம்  பறித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த  மற்றொரு இளம் பெண்ணை திருமணம் செய்து சரவ ணம்பட்டி பகுதியில் மசாஜ் சென்டர் ஒன்றை துவக்கி, அதன்  மூலமும் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இப்படி  தொடர்ந்து மோசடி செய்துள்ள பார்த்திபன் மீது பெண் களை ஏமாற்றியது, பணத்தை பெற்று மோசடி செய்து என புகார்கள் குவியத் துவங்கியது. தொடர்ச்சியாக, கடந்த 2015  ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 17 வழக்கு கள் பார்த்திபன் மீது கேரள மாநிலம் பாலக்காடு, தமிழ் நாட்டில் திருப்பூர், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்க ளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 8 வழக்குகள் பணம்  ஏமாற்றியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், மோசடி புகார்கள், பெண்களை ஏமாற்றி  பணம் பறித்தல், தொழிலதிபராக நடித்து பணம் பறித்தல் என  தொடர்ந்து செய்து வந்ததை அடுத்து பார்த்திபனை குண்டர்  சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாநகரக் காவல் ஆணை யர் உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப் பட்டு உள்ள பார்த்திபனிடம் குண்டர் சட்டத்தில் அடைக்கப் பட்டதற்கான உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.

;