districts

img

நீதிக்குப் புறம்பாக சிறை வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்க

ஈரோடு, ஜூலை 2- நீதிக்குப் புறம்பாக சிறைவைக் கப்பட்டுள்ள அனைவரையும் விடு தலை செய்ய வேண்டுமென தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள்  நலக்குழுவின் ஈரோடு மாவட்ட 6 ஆவது மாநாடு, மரப்பாலத்தில்  நடைபெற்றது. மாவட்ட தலைவர் கே.எஸ்.இஸாரத்தலி தலைமை வகித்தார். வழக்கறிஞர் திருமலைராஜன் தொடக்க உரை யாற்றினார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி மற்றும் தமிழக மக்கள் ஒற்றுமை  மேடை தலைவர் கே.துரைராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறை கைதிகளில் 10 ஆண்டு கள் முடிவடைந்த நிலையில் நன் னடத்தை காரணமாக பலர் விடு தலை செய்யப்படுகின்றனர். சிலர்  ஏழாண்டு சிறைவாசம் அனுப வித்த நிலையிலேயே விடுதலை பெற்றதும் உண்டு. ஆனால், 25  ஆண்டுகள் சிறைவாசம் முடிந்த நிலையிலும் முஸ்லிம்கள் விடு தலை செய்யப்படவில்லை. அவர் களில் பலர் சிறைச்சாலையிலேயே படித்து, பட்டம் பெற்று, முதுநிலை பட்டதாரிகளான நிலையிலும் விடுதலை செய்யப்படவில்லை. இது அரசின் பாரபட்சமான அணுகுமுறையைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆகவே, நீதிக்குப் புறம்பாக சிறைவைக்கப்பட்டள்ள அனைவரையும் விடுதலை செய்ய  வேண்டும். அனைத்துப்பகுதி  மக்களின் நலன்களுக்கு எதிராக இருக்கிற பொது சிவில் சட்டத்தை கொண்டு வரக்கூடாது. ஈரோடு மாவட்டத்தில் சிறு பான்மை நலத்துறைக்கு தனியாக அலுவலகம் அமைக்க வேண்டும். ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும், கல்வி  உதவித்தொகை நிறுத்தப் பட்டதை கண்டித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மாநில பொது செயலாளர் எம். ராமகிருஷ்ணன் நிறைவுரையாற் றினார். தொடர்ந்து, அமைப்பின் மாவட்ட தலைவராக கே.எஸ். இஸாரத்தலி, செயலாளராக  ப.மாரிமுத்து, பொருளாளராக கு. நடராஜன் உள்ளிட்ட 9 பேர்  கொண்ட நிர்வாகக்குழுவும், 27  பேர் கொண்ட மாவட்டக்குழுவும்  தேர்வு செய்யப்பட்டது.