தருமபுரி, ஏப்.27- ஏழை, எளிய விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் மிட்டாரெட்டி அள்ளி கிராமத் திற்கு அடிப்படை வசதி கேட்டு அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தினர் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நல்லம்பள்ளி வட்டம், மிரட்டாரெட்டி அள்ளி ஆதிதிரா விடர் மக்களுக்கு 2021 ஆம் ஆண்டு தின்ன அள்ளி சர்வே எண்: 185ல் 48 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பட்டாவுக் கான இடத்தை அளந்து கொடுக்க வேண்டும். மிட்டாரெட்டி அள்ளி கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்கட்டிகொடுக்கப் பட்ட தொகுப்பு வீடுகள் தற்போது பழுதடைந்துள்ளது. இதனை சீரமைக்க நிதி ஒதுக்கவேண்டும். கழிவுநீர் கால்வாய் சிமெண்ட் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறை வேற்ற வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் கே.எல்லப்பன் தலைமை ஏற்றார். இதில், விதொச மாவட்ட செயலாளர் எம்.முத்து, தலைவர் கே.கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர் சிவசந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.சின்ன ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் கே.குப்புசாமி, வட்ட செயலா ளர் கே.முனியப்பன், மாதர் சங்க வட்டசெயலாளர் எல்.மாலா, வாலிபர் சங்க வட்ட செயலாளர் டி.சிவகுரு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.