districts

img

பாரதிபுரம் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருப்பூர், அக். 10 – சுதந்திரப் போராட்டத் தியாகி பகத்சிங் 115  ஆவது பிறந்தநாள் மற்றும் புரட்சியாளர் சேகு வேரா நினைவுநாளை முன்னிட்டு ஞாயிறன்று  இடுவாய் ஊராட்சி பாரதிபுரம் நடுநிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்  நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை கள், திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு  மையம், திருப்பூர் லோட்டஸ் கண் மருத்துவ மனை இணைந்து நடத்திய இம்முகாமை இடு வாய் ஊராட்சிமன்ற தலைவர் கே.கணேசன் துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப் பினர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உன்னிகிருஷ்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் சி.மூர்த்தி, அவிநாசி ஒன் றிய கவுன்சிலர் பி.முத்துசாமி, திருப்பூர் நில வள வங்கியின் இயக்குநர் கே.ஈஸ்வரன், வேல்முருகன் கிரசர் உரிமையாளர் பாலசுப் பிரமணியம், திருப்பூர் அரசு மருத்துவமனை  எலும்பியல் நிபுணர் மருத்துவர் சுந்தரமூர்த்தி, கிரி கிரசர் உரிமையாளர் ர.பார்த்திபன் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் எஸ்.பரமசிவம், பாரதிபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் காளீஸ்வரி சுப்பிரமணியன், வார்டு உறுப்பினர்கள் எம். கணேசன், சுப்பிரமணியன், பூவதி பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். அருள், மாவட்டச் செயலாளர் செ.மணிகண் டன், துணைத் தலைவர் வீ.பாலசுப்பிரமணி, ஒன்றிய நிர்வாகிகள் டி.உமாசங்கர், பிரகாஷ்,  ஜி.சிந்தன், என்.கார்த்தி மற்றும் ஊராட்சி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இம் முகாமில் 191 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 36 நபர்கள் கண் புரை ஆபரேஷன்  செய்வதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

;