districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மோசடி செய்த தலைமைக் காவலர் மாற்றம்

தருமபுரி, ஜூன் 14- ஒரே வீட்டை நான்கு பேருக்கு விற்று மோசடி செய்த  அதியமான்கோட்டை தலைமைக் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை காவல் நிலை யத்தில் பெண் தலைமைக் காவலராக சூர்யா என்பவர் பணி புரிந்து வந்தார். இவர் ஒரே வீட்டை நான்கு பேருக்கு விற்பனை  செய்து, சுமார் ரூ.38 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப் பட்ட சாந்தமூர்த்தி, பழனிச்சாமி, ஓய்வுபெற்ற உதவி காவல் ஆய்வாளர் அங்கப்பன், நஞ்சய்யன் ஆகியோர் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்திருந்த னர். இதைத்தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் (பொ)  பிருந்தா, தலைமைக் காவலர் சூர்யாவை, ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுதொடர் பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மடத்தூர் பகுதியில் வரலாற்று  ஆய்வாளர்கள் ஆய்வு

உடுமலை, ஜூன் 14- மடத்துக்குளம் அருகே உள்ள மடத்தூர் பகுதியில் காணப்படும் பெருங்கற்கால கல்வட்டங்கள் குறித்து வர லாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, சங்கராமநல் லூர் பேரூராட்சிக்குட்பட்ட மடத்தூர், மயிலாபுரம் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கல்வட்டங்கள் சிதில மடைந்து காணப்படுகின்றன. இங்கு ஆதிச்சநல்லூர், கொடு மணல் போன்று ஏராளமான இரும்பு எரிகற்களும், பெருங் கற்கால கல்வட்டங்கள் இருப்பதை அறிந்து உடுமலை வர லாற்று ஆய்வு நடுவத்தினர் நேரில் சென்று ஆய்வு செய்த னர். இப்பகுதிக்கு அருகில் ஐவர்மலை எனும் அயிரை  மலை இருப்பதும், பதிற்றுப்பத்து பாடல்களில் இவ்விடங் கள் பாடல்களாகக் குறிப்பிட்டு எழுதியதையும் இங்கு  நினைவுகூர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குவார்ட்ஸ் (Quartz) என்ற வெள்ளைக்கற்கள் ஆங்காங்கே  இருப்பதையும் ஆய்வு செய்தனர். கொடுமணல், கொங்கல் நகரம் போன்று இவ்விடத்திலும் மேற்பரப்பு ஆய்வும், தொல்லியல் அகழ்வாய்வும் மேற்கொண்டால் ஏராளமான பொருட்கள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக தொல்லி யல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி தெரிவித்துள்ளார்.

இக்கற்கள் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, மடத்தூர், மயிலாபுரம், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதி களிலும் இதுபோன்று மூடுகற்கள் ஏராளமாக உள்ளன. விவ சாய நிலங்களில் உழவு செய்தபோது முதுமக்கள் தாழி கள், ஓடுகள் அதிகமாகக் கிடைத்துள்ளன, என்றனர். விவசாய நிலங்கள் விரிவுபடுத்தும் போது அவை அப்புறப்படுத்தப் பட்டதும் தெரியவந்துள்ளது. ஆகவே, இருக்கும் கல்வட்டங்க ளையாவது காப்பாற்றவும், அடுத்த தலைமுறைக்கு நமது  தொல்லியல் சின்னங்களை பாதுகாத்து வெளிக்கொணரவும் ஒன்றிய, மாநில தொல்லியல் துறைகள் இதில் தலையிட வேண்டும் என உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உதகை மனுநீதி நாள் முகாமில் ரூ.1.6 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

உதகை, ஜூன் 14- நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம் உதகை ஊராட்சி ஒன்றி யம் பாலகொலா ஊராட்சிக்குட்பட்ட பி.மணியட்டி சமுதாயக் கூடத்தில், மனுநீதி நாள் முகாம் வியாழனன்று நடைபெற்றது.  இதில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு, 107 பயனாளிகளுக்கு ரூ. 1.6 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இதில் ஆட்சியர் பேசுகையில், “ஏற்கெனவே பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 95  மனுக்கள் பெறப்பட்டதில், 71 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டன. மகளிர் சுயஉதவிக் குழுக்களை பொறுத்தவரை கடனு தவிகள் மட்டுமின்றி, தனித்திறமைகளை ஊக்குவித்து அதன்  மூலம் உருவாக்கப்படும் பொருட்களை சந்தைப்படுத்தவும் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பாலகொலா ஊராட்சியை பொறுத்தவரை சுமார் 32 மகளிர் சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகிறது. இந்த குழுக்கள் மூலம் உரு வாக்கப்படும் பொருட்கள் வெளிசந்தைகளுக்கு விற்பனை செய்ய கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ள மகளிர் திட்ட இயக்குநர் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார். 

இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, வேளாண் பொறியியல், வருவாய் உட்பட பல் வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி  அரங்குகளை பார்வையிட்டார். இந்நிகழ்வில், கூடுதல் ஆட்சி யர் (வளர்ச்சி) கௌசிக், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தாமரைமனாளன், உதகை கோட்டாட்சியர் மக ராஜ், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) காசிநாதன், உதகை ஊராட்சி ஒன்றியத் தலைவர் மாயன், பாலகொலா ஊராட்சித் தலைவர் கலையரசி, துணைத் தலைவர் மஞ்சை வி.மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

திருப்பூர் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் மானியம் 

திருப்பூர், ஜூன் 14- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த  தொழில் முனைவோர்களுக்கு, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்பட உள்ளதென தெரி விக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அண்ணல் அம்பேத் கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தொழில் முனை வோர்களுக்கு கடனுதவியோடு இணைந்த மானியம் வழங் கப்படும். இதில் ஆயத்த ஆடைகள் தைத்தல், உணவுப் பதப் படுத்தல், தென்னை நார் சார்ந்த தொழில்கள், ரைஸ்மில்,  என்ஜினியரிங் தொழில்கள், பிளாஸ்டிக் இன்ஜக்சன் மோல் டிங், சிலக்ரீலிங், அழகு நிலையம், உடற்பயிற்சிக்கூடம், வாடகை கார், ஆட்டோ, லாரி, வேன், பேருந்து, காங்கிரீட் மிக் சர், ஆம்புலன்ஸ், ரிக்போரிங், குளிர்சாதன ட்ரக் உள்ளிட்ட  எந்தத் திட்டமாகவும் இருக்கலாம். மேலும், இயங்கிக் கொண் டிருக்கும் தொழில் நிறுவனங்களின் விரிவாக்கம், பல்துறை யாக்கம், நவீனமாக்கல், தொழில் நுட்பமேம்பாட்டு ஆகியவற் றிற்கும் மானிய உதவி வழங்கப்படும். இத்திட்டதிற்கு தகுதி யும், ஆர்வமும் கொண்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யின பிரிவைச் சேர்ந்த தொழில் முனைவோர், திட்ட அறிக்கை  மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 0421 – 2475007, 8925534022, 8925534023, 8925534024 ஆகிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி விரோத நடவடிக்கையால் நீக்கம்

திருப்பூர், ஜூன் 14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட் டம், குடிமங்கலம்  ஒன்றியக் கமிட்டி உறுப்பினர் எம்.சுந் தர்ராஜ் கட்சி விரோத நடவ டிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக, மார்க் சிஸ்ட்  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

41 பேருக்கு டெங்கு: வீதியில் குப்பை வீசினால் அபராதம்!

கோவை, ஜூன் 14- கோவையில் 41 பேர் டெங்கு காய்ச் சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுகா தாரத்தை சீர்குலைக்கும் வகையில் வீதி யில் குப்பை வீசினால் அபராதம் விதிக் கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏடீஸ் கொசு கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த கொசு நல்ல தண்ணீரில் முட்டையிட்டு உற்பத்தி ஆகிறது. மழை நீரில் அதிக எண்ணிக்கையில் டெங்கு கொசு உரு வாகும். தற்பொழுது, தென்மேற்கு பரு வமழை காலம் தொடங்கி இருப்பதால் டெங்கு பரவலும் நகரில் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, கோவை நகரில் இந்த மாதம் இதுவரை 41  பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக் கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு இதே  மாதத்தில் 162 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆறு மாதங் களில் மொத்தம் 1,220 பேர் டெங்கு  காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்தாண்டு முழுவதும் 2,020 பேர்  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள் ளது. தொட்டியில் போடாமல் குப்பை களை வீதியில் வீசியவர்கள், வணிக வளாகப் பகுதிகளில் குப்பைகளை தேங்க காரணமாக இருந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இதுவரை ரூ.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள் ளது  என்று அதிகாரிகள் தெரிவித்த னர்.
 

;