சேலம் மே 31- இந்திய தொழிற்சங்க மையத்தின் அமைப்பு தினம், சேலம் மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் கொண்டா டப்பட்டது. இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) அமைப்பு தினம் 54 ஆண்டுகள் நிறைவு செய்தததை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொடியேற்றத்துடன் கொண்டா டப்பட்டது. சேலம் பால் மார்க்கெட் பகுதியில் ரயில்வே ஏற்றுமதி, இறக்குமதி தொழிற்சங் கம் சார்பில் கொடியேற்று விழா நடைபெற் றது. இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர். வெங்கடபதி சிஐடியு கொடியை ஏற்றி வைத்து, அமைப்பு தினம் குறித்து உரை யாற்றினார். இதேபோன்று, சிஐடியு மாவட் டக்குழு அலுவலகமான வி.பி.சிந்தன் நினை வகத்தில் நடைபெற்ற அமைப்பு தின சிறப்பு பேரவை கூட்டத்திற்கு, சிஐடியு மாவட்ட நிர் வாகி பி.பன்னீர்செல்வம் தலைமை வகித் தார். இதில் மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந் தன், சாலைப் போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர். வெங்கடபதி, பி.விஜயலட்சுமி, மாவட்டப் பொருளாளர் வி.இளங்கோ, மாவட்ட நிர்வா கிகள் ஆர்.வைரமணி, சி.கருப்பண்ணன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.