districts

img

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் காலமானார்

கோவை, அக்.12- முன்னாள் சட்டபேரவை உறுப்பினரும், திமுக பிரமுக ருமான கோவை தங்கம் செவ்வாயன்று இரவு கால மானார். 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர் தல்களில்  கோவை மாவட்ட வால்பாறை தொகுதியில் கோவை தங்கம் வெற்றி பெற்று  உள்ளார்.  தமிழ்மாநில காங்கிரசில் முக்கிய நிர்வாகியாக இருந்த கோவை தங்கம், அக்கட்சியின் செயல்பாட்டில் ஏற் பட்ட அதிர்ப்த்தி காரணமாக அதில் இருந்து விலகி கடந்த சட்ட மன்ற தேர்தல் நெருக்கத்தில் திமுகவில் இணைந்தார்.கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த  நிலையில் செவ்வாயன்று காலமானார். அவரது உடல் சாய் பாபா காலனி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிகாக வைக்கப்பட்டிருந்தது. இவரது மறைவைய றிந்த திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட அனைத்து கட்சி  நிர்வாகிகள் சென்று அஞ்சலி செலுத்தினர்.

;