நாமக்கல், ஜூலை 2- ராசிபுரம் அருகே 100 அடி கிணற்றில் தவறி விழுந்த மாணவர்களை காப்பாற்ற முயன்ற மாணவனின் தந்தை உட்பட 4 பேர் உயிரி ழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள கணவாய்பட்டியைச் சேர்ந்த அபி னேஷ் (15), பிலிப்பாகுட்டையைச் சேர்ந்த நித்தீஸ்குமார் (15), விக்னேஷ் (14) ஆகிய மூவரும் ராசாப்பாளையம் அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந் நிலையில், சனியன்று கணவாய்பட்டியிலி ருந்து இருசக்கர வாகனத்தில் மூன்று பேரும் பிலிப்பாகுட்டை நோக்கி சென்றுள்ளனர். கணவாய்பட்டி வளைவில் சென்றபோது, பிரேக் கட் ஆனதால் சாலையோரம் இருந்த சுமார் 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்தனர். பராமரிப்பு இல்லாத கிணற்றில் 15 அடிக்கு தண்ணீரும், 10 அடிக்கு சேறும் இருந்தது. இதனையறிந்த கணவாய்பட்டி பகுதியைச் சேந்த அபினேஷின் தந்தை குப்பு சாமி (38) மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த சரவணன் (30), அசோகன் (36) ஆகியோர் மாணவர்களை காப்பாற்ற கிணற்றில் குதித் துள்ளனர். மேலும், இதுகுறித்து ராசிபுரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி நீரில் தத்தளித்து கொண்டிருந்த அபினேஷ், நித் தீஸ்குமார் ஆகியோரை உயிருடன் மீட்டனர். இருவருக்கும் ராசிபுரம் அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது.
மேலும், மாணவர்களை காப்பாற்ற முயன்றவர்கள் 4 மணி நேரமாக தேடப்பட்டு வந்த நிலையில், கிணற்றில் விழுந்த மாணவர் உட்பட 4 பேரை உயிரிழந்த நிலையில் தீய ணைப்புத்துறையினர் மீட்டனர். இதைத்தொ டர்ந்து கிணற்றில் தவறி விழுந்தவர்களில் ஒரு வரான விக்னேஷ் மற்றும் கிணற்றில் விழுந்த வர்களை மீட்கும் முயற்சியின்போது சேற்றில் சிக்கி உயிரிழந்த குப்புசாமி, சரவணன், அசோக் குமார் ஆகியோரது உடல் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட் டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆகியோர் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உயி ரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரி வித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல மைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகை யில், சாலையோரம் உள்ள கிணற்றிற்கு தடுப்பு அமைத்திருந்தால் இந்த விபத்து நடந் திருக்காது. சாலையோரம் கிணற்றுக்கு தடுப்பு அமைக்க கோரி பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ் சாட்டியுள்ளனர்.