நாமக்கல், மே 15- கொல்லிமலையில் கோடைக்கால கலைப்பயிற்சி நிறைவு பெற்றதைத்தொடர்ந்து, முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஜவகர் சிறுவர் மன் றம் விரிவாக்க மையம் சார்பில், கொல்லிமலை, வாழவந்தி நாடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மே 6 முதல் மே 15 வரை கோடைக்கால கலைப்பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தற்காப்புக்கலை, ஓவியம், கிராமிய நடனம், பரதநாட்டியம் போன்ற நுண்கலைகளில் பயற்சி வழங்கப் பட்டது. இப்பயிற்சியில் 45 மாணவ, மாணவிகள் பங்கேற்ற னர். இந்நிலையில், புதனன்றுடன் பயிற்சி நிறைவடைந்தவு டன், முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு ஜவகர் சிறுவர் மன்ற விரிவாக்க மைய திட்ட அலுவலர் மா.தில்லை சிவக்குமார் சான்றிதழ் வழங்கி வாழ்த்தி பேசினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.