ஈரோடு, அக்.16- ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் அந்தியூர் மற்றும் பவானி பகுதி யில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந் தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் புதுப்பாளையம் பகுதி குடியி ருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டது. மேலும், குண்டேரி பள்ளம் அணை 41.75 ஆன முழு கொள்ள ளவை எட்டியுள்ளது. பெரும்பள்ளம் அணை யின் நீர் மட்டம் 22.97/30.84 அடியாகவும், வறட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 33.46/33.50 அடியாகவும் உள்ளது. பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 101.54 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 5844 கனஅடி யாக உள்ளது. அணையிலிருந்து 1600 கன அடி தண்ணீர் குடிநீர் மற்றும் கீழ்பவானி கால் வாயில் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை மீண்டும் எட்டி யுள்ள நிலையில், 8500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அண்ணா மடுவில், அந்தியூர் பெரிய ஏரி செல்லும் வழி, பர்கூர் சாலையில் கெட்டி சமுத்திரம் ஏரி நிரம்பி வழிவதால் போக்கு வரத்து தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையி னர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி களுக்கு சென்று பார்வையிட்டு வடிகால் வசதி அடைப்புகளை நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
அந்தியூர் பெரிய ஏரி நிரம்பி அதிலிருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந் துள்ளது. இதனால் பெரியார் நகர். ஏஎஸ்எம் காலனி, அழகர் நகர், அண்ணாமடுவு ஆகிய பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கி றது. வரட்டுப்பள்ளம் அணை முதல் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகள் வரை சுமார் 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங் கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அந்தியூர் - வெள்ளி திருப்பூர் பிரதான சாலையில் போக் குவரத்து துண்டிக்கப்பட்டது. இதேபோல அந்தியூர் - ஈரோடு – பவானி - மேட்டூர் பிர தான சாலை, அண்ணாமடுவு பகுதியிலும் போக்குவரத்து நான்காவது நாளாக துண் டிக்கப்பட்டுள்ளது.
பர்கூரில் நிலச்சரிவு
பர்கூர் மலைப்பகுதியில் கடந்த மூன்று தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக பர்கூர் மலைப் பாதையில் சுமார் 6க்கும் மேற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகம் - கர் நாடகா இடையே சனியன்று இரவு 10 மணி முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்திலிருந்து கர்நாடக செல்லக்கூடிய சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் அனைத்தும் அந்தியூர் அருகே உள்ள செல்லம்பாளையம் வாகன சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற் குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் பர்கூர் காவல் சோதனைச்சாவடியில் நிறுத் தப்பட்டுள்ளன.
நிலச்சரிவின் காரணமாக மரங்களும், பாறைகளும் சாலையின் நடுவே விழுந் துள்ளன. சிறிய மரங்களை மழைவாழ் மக் களே அகற்றினர். தொடர்ந்து சாலையில் உள்ள பாறைகள் மற்றும் மண் சரிவை அகற்றும் பணியில் ஜேசிபி இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நிவாரண முகாம்
வடகிழக்கு பருவ மழையின் காரண மாக ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டத்தில் குடியிருப்புகளில மழை வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு காளிபாளையம் மக்கள் சீதாராமர் கோவில் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆண் கள், 14 பெண்கள், 8 சிறுவர்கள் உள்ளிட்ட 32 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்தியூர் வட்டம், வெள்ளி திருப்பூரில் வெள்ளநீர் புகுந் ததில் 24 ஆண்கள், 2 சிறுவர்கள் உள்ளிட்ட 76 நபர்கள் பட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்கப்பட்ட முகாமில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.