திருப்பூர், டிச.17- திருப்பூர் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கொடி கம்பங்கள் அகற்றுவது குறித்து மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் கூட்டத்தை நடத்தி உரிய தீர்வு காணவும் மாநகராட்சி ஆணையா ளரிடம், கட்சி நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துகண்ணன் எழு திய கடிதம், மாநகராட்சி ஆணையா ளர் கிராந்திகுமார் பாடியிடம் வழங்கப்பட்டது. இதைத்தொ டர்ந்து வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் ஆகி யோர் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை பாட்டை மாநகராட்சி ஆணையரி டம் எடுத்துக் கூறினர். சென்னை உயர்நீதிமன்ற உத்த ரவு என்ற பெயரில் இந்திய தேர்தல் ஆணையத்தினால் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்ற கடந்த சில நாட்களாக மாநகராட்சி அதிகாரி கள் நடவடிக்கை மேற்கொண்டு வரு கின்றனர்.
குறிப்பாக போக்குவரத் திற்கோ, மக்களுக்கோ இடையூ றாக இருப்பின் அப்புறப்படுத்திக் கொள்வதில் எந்தவித ஆட்சேபனை யும் இருக்க முடியாது. அதே நேரத்தில் இத்தகைய முடிவுகளை தேர்தல் தருணங்களில் சின்னங்களை, கட்சி அடையாளங் களை குறிப்பிட்ட காலத்திற்கு தேர் தல் விதிமுறைகளை காட்டி அப் புறப்படுத்துவது என்ற முடிவு வரும் போது அனைத்து அரசியல் கட்சி களின் கூட்டத்தை நடத்தி கலந்து ஆலோசனை செய்து அனைவரின் ஒத்துழைப்போடு பொருத்தமான முறையில் அமலாக்கப்படும்.
தற் போது அத்தகைய ஜனநாயக நடை முறைகள் அப்பட்டமாக மீறப்பட்டு உள்ளதாக கருதுகிறோம். எனவே அனைத்து அரசியல் கட் சிகள் மற்றும் அமைப்புகளின் கூட் டத்தை கூட்டிட வேண்டும் எனவும், இந்திய அரசியல் சாசனத்தின் 19(1) (சி) பிரிவு வழங்கியுள்ள சங்கம் சேரும் உரிமை உள்ளிட்ட அடிப் படை உரிமையை மறுக்கும் செய லாக உள்ளது. இது கூட்டு பேர உரி மையை மறுக்கும் செயலாகும். தனது உறுப்பினர்களுக்கு ஒன்று சேர அழைக்கும் கொடி, தகவல் பலகை போன்றவற்றை மறுப்பதா கும். பிரிட்டிஸ் காலத்தின் அடக்கு முறை சட்டங்களை இன்றைக்கும் வைத்துக் கொண்டு நவீன ஜனநா யக இந்தியாவை கட்டமைக்க முடி யாது. எனவே உடனடியாக அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை கூட்டி இப்பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் கேட்டுக் கொள்வதாக தெரி வித்துள்ளனர்.