districts

img

டவுன்ஹால் பகுதியில் புதிதாக 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

கோவை, செப்.11- கோவை டவுன்ஹால் பகுதியில் சாலையோர சிறு வியாபா ரிகள் வழங்கிய 16 கண்காணிப்பு கேமராக்களின் பயன் பாட்டை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். கோவை டவுன்ஹால் பகுதியில் பெரிய கடைகள் முதல்  நடைபாதை கடைகள் வரை என ஏராளமானவை உள்ளன. இந்நிலையில், கோவை டவுன்ஹால் அருகே உள்ள கோட் டையை ஈஸ்வரன் கோவில் வீதி பகுதியில் செயல்படும் 30க்கும் மேற்பட்ட துணி கடை உரிமையாளர்கள் அனை வரும் ஒன்றிணைந்து அந்த பகுதியில் சிசிடிவி கேமராக் களை நிறுவுவதற்கு முயற்சி மேற்கொண்டனர். இதையடுத்து அந்த பகுதிகளில் 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணி தொடக்க நிகழ்ச்சி சனியன்று நடை பெற்றது. இதில் கோவை மாநகர காவல் துறை ஆணை யாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்காணிப்பு கேம ராக்களை பெற்றுக்கொண்டு அதனை கண்காணிப்பு பணியை யும் தொடங்கி வைத்தார். இதுகுறித்து காவல் ஆணையா ளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், தீபாவளி பண்டிகை முன் னிட்டு கோவை மாவட்டத்தின் முக்கிய இடங்களான உக்க டம், டவுன்ஹால், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் போன்ற  பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவு கூட தொடங்கியுள்ளது. இதனை பயன்படுத்தி திருடர்கள் கைவரிசை காட்டக்கூடும். எனவே மாநகர காவல் துறை மூலம் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கண்காணிப்பு கேமராக்களின் பயன்பாடு மற் றும் அதன் முக்கியத்துவம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதில் பதிவாகும் காட்சிகளை வைத்து திருடர்களையும் குற்ற  செயல்களில் ஈடுபடுபவர்களையும் உடனடியாக பிடித்து விட லாம், என்றார்.

;