districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கோபி அருகே ஐடி பெண் ஊழியர் தற்கொலை

ஈரோடு, செப்.18- கோபிசெட்டிபாளையம் அருகே திரும ணமாகி நான்கு மாதங்களேயான ஐடி பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்ப வம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யம் அருகே உள்ள பொலவக்காளிபாளை யம் தோட்டக்காட்டூரைச் சேர்ந்த திருவேங்க டம் - மரகதமணி தம்பதியின் மகள் இந்து (25). பட்டதாரியான இவர் கோவையில் உள்ள தனி யார் மென்பொருள் நிறுவனத்தில் பணி யாற்றி வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவருக்கும், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையம், துளசிநகரைச் சோ்ந்த விஷ்ணுபாரதிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு இருவருமே சென்னையில் தங்கிப் பணியாற்றி வந்தனர். இதற்கிடையில், இந்து வின் பாட்டி உடல்நலக்குறைவால் பாதிக்கப் பட்டதால் அவரைப் பார்ப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு தோட்டக்காட்டூருக்கு வந் துள்ளார். அப்போது தனது அறைக்குள் வெள்ளியன்று காலை சென்ற அவர், இரவு வரை வெளியே வரவில்லை. இதனால், சந் தேகமடைந்த அவரது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இந்து தனது முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் துக்கு வந்த கோபிசெட்டிபாளையம் காவல் துறையினர் இந்துவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், திருமணமாகி சில மாதங்களே ஆவ தால் இந்துவின் தற்கொலைக்கான காரணம் குறித்து கோபி கோட்டாட்சியர் மற்றும் கோபி காவல் துணை கண்காணிப்பானர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ காலில் புகார் அளிக்கலாம் கோவை மாநகர காவல் துறை தகவல்

கோவை, செப்.18- பொதுமக்கள் இனிமேல் வீடியோ காலில் புகார் அளிக்க லாம் என கோவை மாநகர காவல் துறை தகவல் தெரிவித்துள் ளது. இதுதொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளதாவது, தமிழக முதல்வர் கடந்த செப்.13 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்தவாறு, கோவை மாநகரில் பொதுமக்களின் குறைதீர்க்கும் நிகழ்ச்சி தொடர் பாக பொதுமக்கள், குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண் கள் நலன் கருதி அதிகாரிகளை தேடி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் வர தேவையில்லை. பொது மக்கள் தங்களது புகார்களை இணையதளத்தில் (ID:online grievance.copcbe@gmail.com) அனுப்பி வைக்கப்படும் பட்சத்தில் தங்களது இ-மெயிலுக்கு கூகுள் மீட்டிங் லிங்க் (https://meet288.webex.com/meet/pr26411062314)  அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு வாரமும் திங்கட் கிழமை 12 மணி முதல் மதியம் 1 மணி வரை, கூகுள் மீட் மூலம் கோவை மாநகர காவல் ஆணையாளரை தொடர்பு கொண்டு  புகார் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர், செயலாளர் கைது

சேலம், செப்.18- தலைவாசல் அருகே ஒப்பந்த பணிகளை மேற்கொள்ள ரூ.55 ஆயி ரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்ற  தலைவரின் கணவர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள தேவியாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக இருப்ப வர் அமுதா. இவரது கணவர் ஜெயக் குமார் தலைவாசல் அருகே பட்டுத் துறை தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கத்தில் பணியாற்றி வரு கிறார். இந்நிலையில், தேவியாக் குறிச்சி பகுதியை சேர்ந்த ஊராட்சி ஒப்பந்ததாரர் செந்தில்குமார் என்ப வருக்கு ஊராட்சி பணிகள் மேற் கொண்டதில் 5 லட்சம் ரூபாய் பில்  தொகை வரவேண்டி உள்ளது. இதற் காக ஊராட்சி மன்ற தலைவரின் கண வர் ஜெயகுமார், செந்தில்குமாரிடம் பில் தொகையில் 13 சதவிகிதம் (ரூ.55 ஆயிரம்) லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து செந்தில்குமார் சேலம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். அதனடிப்ப டையில் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வா ளர் ரவிச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர் ரசாயனம் தட விய ரூபாய் நோட்டுக்களை செந் தில்குமாரிடம் கொடுத்து அனுப்பி னார். இதை செந்தில்குமார் ஊராட்சி செயலாளர் சின்னசாமியிடம் ஊராட்சி அலுவலகத்தில் வைத்து கொடுத்துள்ளார். இதன்பின் ரசாய னம் தடவிய பணத்தை சின்னசாமி, ஊராட்சி மன்ற தலைவரின் கணவ ரான ஜெயக்குமாரிடம் வழங்கியுள் ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச  ஒழிப்பு காவல் துறையினர் ஜெயக் குமார், சின்னசாமி ஆகிய இருவரை யும் கையும், களவுமாக பிடித்தனர். இதைத்தொடர்ந்து ஜெயக்குமார் மற் றும் சின்னசாமி ஆகிய இருவரது வீடு களிலும் லஞ்ச ஒழிப்பு காவல் துறை யினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித் தனர். சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா கணவர் ஜெயக் குமார் மற்றும் ஊராட்சி செயலா ளர் சின்னசாமி ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்காக சேலம் அழைத்துச் சென்றனர்.

திருப்பூரில் அரசு வழக்கறிஞர், மகளுக்கு அரிவாள் வெட்டு

திருப்பூர், செப்.18- திருப்பூரில் அரசு வழக்கறிஞர் மற்றும் அவரது மகளை  அடையாளம் தெரியாத நபர் அரிவாளால் வெட்டிய சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மகிளா  நீதிமன்றம் அரசு வழக்கறிஞராக இருப்ப வர் ஜமீலா பானு. இவர் குமரன் சாலையில் உள்ள தனியார் வளாக கட்டிடத்தில் அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார். ஞாயிறன்று தனது மகளுடன் அலுவலகத்தில் இருந்தபோது நபர் ஒருவர் ஜமிலா பானு மற்றும் அவரது மகளை அரிவா ளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இவர்களது கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக இருவரை யும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு  இருவரும் கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இந்த சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தாக் குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் அலுவலகத்திற்கு அருகே சாலை ஓரம் மீட்கப்பட்டுள்ளது. திருப்பூரில் பட்டப்பக லில் அலுவலகத்தில் இருந்த பெண் வழக்கறிஞர் மற்றும்  அவரது மகள் அரிவாள் வெட்டப்பட்ட தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல் துறை யினர் விசாரித்து வருகின்றனர்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை முதியவர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு

பொள்ளாச்சி, செப்.18- 15 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறை யினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், ஆனைமலை தாலுகாவிற்குட்பட்ட பகுதியிலுள்ள அரசுப்பள்ளியில் பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், அப்பள்ளியைச் சேர்ந்த 15 மாணவிகள் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் நட ராஜன் (60) என்பவர், தங்களிடம் தாகத முறையில் ஈடுபட்ட தாக மாணவிகள் தெரிவித்தனர். இதனையடுத்து அப்பள்ளி யின் தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் நடராஜன் என்பவரை ஆனைமலை காவல் துறையினர் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடராஜன் மீதான விசாரணை தொடர்ந்து நடை பெற்று வருகிறது. மேலும், விசாரணையின் முடிந்த பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடராஜனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்து முன்னணி போராட்ட அறிவிப்பால் மக்கள் அச்சம்: பாதுகாப்பு கேட்டு போலீசில் மனு

அவிநாசி, செப்.18- இந்து முன்னணி போராட்ட அறிவிப்பால் பொதுமக்களையும், வியாபாரிகளையும் பாதுகாக்கக்கோரி அனைத்து கட்சியினர் காவல் நிலையத்தில் ஞாயிறன்று மனு அளித் துள்ளனர். அண்மையில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மனுதர்மம் குறித்து உரையாற்றி உள்ளார். இதற்கு இந்து  முன்னணி அமைப்பினர் வருகிற (செப்.20) செவ்வாயன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. இப் போராட்ட அறிவிப்பு மத துவேசத்தையும், வன்முறையும் ஏற்படும் என பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியில் பெரும் அச்சம் ஏற் பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக, மார்க் சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடை பெற்றது. இதன்பின், காவல்துறை துணை  கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் ஆகி யோரிடம் அனைத்துக் கட்சிகளின் சார்பில், பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு மனு அளித் துள்ளனர். இதில், திமுக மாநில செயற்குழு உறுப்பி னர் சுவாமிநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, ஒன்றிய பொறுப்பாளர் பழனிச்சாமி, சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, ஒன்றிய செய லாளர் ஈஸ்வரமூர்த்தி, சிபிஐ ஒன்றிய செயலா ளர் சண்முகம், ஒன்றிய நிர்வாகி ஷாஜ கான், காங்கிரஸ் கட்சியின் சாய் கண்ணன், மதிமுக பாபு, கொதேமக ராஜ்குமார் ஆகி யோர் உடனிருந்தனர்.

முதல்வரை புகழ்ந்த அதிமுக எம்எல்ஏ

கோவை, செப்.19- கோவை மாவட்டம், சூலூரில் நடை பெற்ற மருத்துவ முகாமில் அதிமுக எம்எல்ஏ கந்தசாமி பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் மருத்துவத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பாக செயல்படுத்தி  வருகி றார். திமுக, அதிமுக கட்சிகளின் சின்னங்கள் வெவ்வேறாக இருந்தாலும்  எண்ணங்கள் ஒன்றுதான். மக்கள் நலமே முக்கியம் என்ப தைக் கருத்தில் கொண்டு அரசு செயலாற்றி வருவதாக தமிழக அரசுக்கு புகராரம் தெரி வித்தார். அதிமுக எம்எல்ஏ ஒருவர் தமிழக அரசையும் முதல்வரையும் புகழ்ந்து பேசி னார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது, “நான் அதிமுக எம்எல்ஏ வாக இருந்தாலும், அரசின் நலத்திட்டங் களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் என்னு டைய கடமையையைச் செய்வேன். கட்சி பாகுபாடு இல்லாமல் மக்கள் பணியானது முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்து வருகிறது” என்றார்.

;