ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு தருமபுரி, ஜன.29- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 5 ஆம் தேதியன்று மாவட்ட அளவில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள் ளது என ஜாக்டோ – ஜியோ அறிவித்துள் ளது. ஜாக்டோ – ஜியோ சார்பில் போராட்டம் குறித்து மாவட்ட ஆலோசனை கூட்டம் தரும புரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத் தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப் பாளர் எம்.சுருளிநாதன் தலைமை வகித்தார். இதில், தமிழக தமிழ் ஆசிரியர் கழக மாநில அமைப்பாளர் இராசா, ஆனந்தன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.எம்.கொளரவன், பதவி உயர்வு பெற்ற முதுநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் முருகேசன், தொடக்கப்பள்ளி ஆசி ரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப் பினர் சிவக்குமார்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.சேகர், தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செய லாளர் பெ.மகேஸ்வரி, மாவட்ட தலைவர் சி. காவேரி, தமிழ்நாடு நூலகத்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் பிரபாகரன் ஆகி யோர் உரையாற்றினர். இக்கூட்டத்தில், பழைய பென்சன் திட் டத்தை உடனடியாக அமல்படுத்த வேண் டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, கால வரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண் டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முது நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களை களைய வேண்டும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக் கூலியில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்து ணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், வனப் பாதுகாவலர்கள், மகளிர் திட்ட ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும். அரசாணை 115, 139 மற்றும் 152 ஆகியவற்றை ரத்து செய்ய வேண் டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.19 ஆம் தேதியன்று தருமபுரியில் மாவட்ட அளவில் உரிமை மீட்பு கருத்தரங்கம் நடத்து வது எனவும், மார்ச் 5 ஆம் தேதியன்று மாவட்ட அளவில் உண்ணாவிரதம் நடத்துவது என வும் முடிவு செய்யப்பட்டது.