districts

img

கன்றுகுட்டியை வேட்டையாடிய சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை

மேட்டுப்பாளையம், செப்.8- மேட்டுப்பாளையம் அருகே விவ சாய தோட்டத்தில் கட்டி வைக்கப் டிருந்த இரண்டு வயது கன்று குட் டியை சிறுத்தையொன்று அடித்து கொன்ற சம்பவம் விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தை அடுத்துள்ள வெள் ளியங்காடு பகுதியில் தோகைமலை அடிவாரத்தில் வனப்பகுதியை ஒட்டி முத்துக்கல்லூர் கிராமம் அமைந் துள்ளது. இங்கு தனக்கு சொந்த மான நிலத்தில் விவசாயம் செய்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவர், புதனன்று இரவு கன்றுகுட்டியினை கட்டி வைத்துவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், வியாழனன்று காலை தோட்டத்திற்கு சென்றபோது, கன்று குட்டி கழுத்து பகுதியில் கடிபட்டு இறந்து கிடந்ததோடு, அதன்பின் பகுதி முழுவதும் ஏதோ விலங்கால் கடித்து உண்ணப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாக வனச்சரக அலு வலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட் டதையடுத்து, காரமடை வனச்சரக  அலுவலர் திவ்யா தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத் தினர்.

இதில், இறந்து கிடந்த கன்று குட்டி கடிபட்ட விதம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் கிடைத்த காலடி தடங்களின் மூலம் சிறுத்தை யால் கன்று குட்டி கொல்லப்பட்டது  என உறுதி செய்யப்பட்டது. கன்று குட்டி சப்தம் எழுப்பாமல் இருக்கும்  வகையில் அதன் குரல்வளை பகு தியை முதலில் கடித்து கொன்று  விட்டு பின்னர், இரையினை இழுத்து செல்ல முயன்று கன்று கட்டி வைக் கபட்டிருந்ததால் முடியாமல் அங் கேயே அமர்ந்து, அதன்பின் பகுதி முழுவதும் சாப்பிட்டு விட்டு சிறுத்தை சென்றுள்ளது தெரிய வந்தது. காலடி தடங்கள் மூலம் தோகைமலை அடி வார காட்டில் இருந்து சிறுத்தை வெளியே வந்திருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் முதற்கட்ட மாக அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, பின்னர் அதில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படை யில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பது என முடிவெடுத்திருப்ப தாக வனத்துறையினர் தெரிவித்த னர். கடந்த இரண்டு ஆண்டுகளா கவே மேட்டுப்பாளையத்தில் உள்ள மலையடிவார கிராமங்களில் சிறுத் தைகள் நடமாடி வருவதாகவும், பல முறை இவை விவசாயிகள் வளர்க் கும் ஆடு, மாடு என கால்நடைகளை வேட்டையாடி வருவதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விவசாய பயிர்களை உண்ண காட்டை விட்டு வெளியேறும் காட் டுப்பன்றி, மான் போன்றவை தோட் டங்களுக்கு வருவதால் இவற்றை வேட்டை இரையாக கொண்ட சிறுத் தையும் தோட்டங்களுக்குள் புகும் சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. எந்த நேர மும் சிறுத்தைகள் வரலாம் என்ற  நிலையில் பகலில் கூட அச்சத்தோடு விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, மனித உயிரிழப்பு ஏற்படுதற்கு முன்பு சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

;