உடுமலை, டிச.9- குடிமங்கலம் வட்டார பகுதியில் நடவு செய்த தென்னங்கன்றுகள் மழை யின் காரணமாக அழுகி வருவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் குடிமங்கலம் ஒன்றிய துணை செயலாளர் ஜெ.ஸ்ரீதர், வேளாண்துறை வட்டார வளர்ச்சி அலு வலரிடம் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது: குடிமங்கலம் பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை விவசாயம் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் ஏராள மான விவசாயிகள் தென்னை விவசா யத்திற்கு மாறியுள்ளனர். இச்சூழலில் கடந்த இரண்டு மாதங் களாக குடிமங்கலம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக விளைநிலங்கள் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனை வெளியேற்ற முடியாததால் தண்ணீரில் மூழ்கி நடவு செய்த தென்னங்கன்றுகள் அனைத்தும் அழுகி வருகிறது. பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து நடப்பட்ட தென்னங்கன்றுகள் அழுகி வருவதால் விவசாயிகள் பெரும் வேதனைக்குள்ளாகி உள்ளனர். ஆகவே, விவசாயிகளுக்கு மாற்று நடவு செய்ய புதிய தென்னங் கன்றுகளை வேளாண்துறையின் மூலம் இலவசமாக வழங்கிட வேண் டும். மேலும், மழையின் காரணமாக பெரும் வருவாய் இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், தென்னை விவசாயிகளுக்கு காப்பீடு செய்வதன் முக்கியத்துவம் குறித்து வேளாண்துறை அதிகாரிகள் விழிப் புணர்வு முகாம்களை நடத்திட வேண்டும் என அம்மனுவில் வலியுறுத் தியுள்ளார்.