உடுமலை, நவ.27- உலகத் தரத்தில் சிறந்து விளங்கும் பட்டு உற்பத்தி தொழிலைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என பட்டு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையின் பாலகாடு கணவாய் வழியாக வரும் காற்று இதமாக இருப்பதால் கோவை, திருப்பூர், திண்டுக் கல் மாவட்டங்களில் வருடம் முழுவதும் வெண்பட்டு உற்பத்தி செய்ய தகுந்த சூழல் உள்ளது. இப்பகுதிகளிலிருந்து உலகத் தரத்தில் பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பட்டு உற் பத்தி தொழில் செய்து வருகின்றனர். மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் காடுகளில் இருந்து, பாமர மனிதனிடம் பட்டுக் கூடு வந்தாக கூறப்படுகிறது. சுமார் 5000 ஆண் டுகளுக்கு முன் சீனாவில் பட்டு தோன்றிய தாக ஆய்வுகள் கூறுகிறது. பின்னர் பட்டு உற் பத்தி உலகநாடுகள் முழுவதும் 2000 ஆண்டு களுக்கு முன்புதான் பரவியது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ராஜா வுக்கு பட்டினால் ஆன ஆடைகள் வந்தாக வர லாறு. உள்ளது. அதன் பின் இந்தியாவில் பல மாநிலங்களில் பட்டு விவசாயம் பரவியது. ஆரம்ப காலத்தில் குடியிருக்கும் வீடுக ளில் வட்ட தட்டுகளில் புழுக்களை வளர்த்து பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்பட்டது. நாள டைவில் பட்டுக்கூடு வளர்ப்பானது. விவசாயி களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. அதிக அள வில் உற்பத்தி செய்யப்பட்டது. அதன் பின் பட்டு வளர்ச்சித்துறை உருவாக்கப்பட்டது. சமீபகாலத்தில் உயரிய தொழிநுட்பத்து டன் வேலை பளுவைக் குறைத்து வெண்பட்டு புழுக்கள் சதுர வடிவ தட்டிகள் (ரேக் ஸ்டம்) மூலம் தனி மனை அமைத்து விரிவுபடுத்தப் பட்டது. முட்டை பொறிப்பு, புழு வளர்ப்பு ஆகி யவை விவசாயிகளால் செய்யப்பட்டுவந்த நிலையில், தற்போது அந்த கால நிலை குறைக்கப்பட்டு நவீன தொழிநுட்ப முறை யில் பயிற்சி அளிக்கப்பட்டு இளம் புழு வளர்ப்பு மையங்கள் மூலம் புழுக்கள் பெறப் பட்டு பட்டுக் கூடு உற்பத்தி செய்யப்பட்டு வரு கிறது. பட்டு கூடுகளிலிருந்து நூல்இழை தயா ரிக்கப்பட்டு, இந்த சமூகத்தில் ஆடை அலங் காரமாகவும், மருத்துவத்துறை சார்ந்த பயன் பாட்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பட்டு ஏற்றும தியின் மூலம் மிகப் பெரிய அளவில் வருமா னம் நாட்டிற்கு கிடைக்கிறது. முதலில் உலகம் முழுவதும் மஞ்சள் பட்டுக் கூடுகளினால் ஆன ஆடைகள் பயன் பாட்டிலிருந்தது. பின் நாட்களில் ஜப்பான் நாட்டின் ஜெயிக்கா திட்டத்தின் மூலம் புதிய தொழிநுட்பத்துடன் வெண்பட்டு கூடுகள் அறி முகம் செய்யப்பட்டது. இப்படி பட்டு உற்பத்தி தொழில் விவசா யத்தின் ஒரு பகுதியாக உள்ளதால், நம் விவ சாயிகள் உலக தரத்தில் பட்டு உற்பத்தியை கொண்டு செல்ல பல புதிய தொழில் நுட்பங் களை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பட்டு விவா சாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.