திருப்பூர், செப். 4- பல்லடம் அருகே கோடங்கி பாளையம் கிராமத்தில் முறை கேடாக இயங்கி வரும் தனியார் கல்குவாரி மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி, விவ சாயி விஜயகுமார் ஞாயிறன்று ஆறா வது நாளாக, உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கோடங்கிபாளையம் கிரா மத்தில் எழில் ப்ளூ மெட்டல்ஸ் குவாரி, எம் சாண்ட், ஜல்லி ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை அரசின் நிபந்தனைகளை மீறி பாறையை அதிக வெடி மருந்து வைத்து தகர்ப்பது, அதிக ஆழத் திற்கு தோண்டுவது என செயல் பட்டு வருவதாக இப்பகுதி குடியி ருப்பு வாசிகள் குற்றம் சாட்டு கின்றனர். இந்த ஆலை, கோடங்கி பாளையம் கிராமம், புல எண் - 57 ல், கடந்த 15 ஆண்டுகளாக 60 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட கனிம வளத்தை விதிமுறைக்கு புறம்பாக விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வருவாய்த் துறை யின் புல வரைபடத்தில் உள்ள ஓடையை மறைத்து குவாரி ஏற் படுத்தி உள்ளனர்.
மின் பாதையி லிருந்து 50 மீட்டர் தள்ளி குவாரிப் பணி செய்யும் விதியை கடை பிடிக்காமல் மின் பாதையை ஒட்டிய குவாரி பணிகள் செய்யப்பட் டுள்ளது. மேலும் இந்த கிராமம், புல எண்கள் - 56, 55 ல் பெற்ற அனுமதியை விட 20 மடங்குக்கு அதிகமாக கற்களை வெட்டி எடுத்துள்ளனர். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனையின்படி 15 ஆண்டுகளாக பசுமை வளையம் அமைக்காமல் உள்ளனர்.கிராம பொதுப் பாதை யில் இருந்து 7 மீட்டர் தள்ளி இருக்க வேண்டும் என்ற விதிகளை மீறி கிராம சாலையை ஒட்டியே குவாரி பணி நடைபெற்றுள்ளது. கிராமத்தில் உள்ள குவாரியைச் சுற்றியுள்ள அனைத்து விவசாய நிலங்களிலும், நிபந்தனையை மீறி எம் சாண்ட் கழிவுகள் மலை போல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. அவற்றி லிருந்து வரும் வெள்ளை புகை யுடன் அனைத்து விவசாய நிலங் களிலும் வெள்ளை துகள்கள் படர்ந்து விவசாயம் செய்ய இயலாமல், காற்று, நீர், மண் மாசு ஏற்பட்டு மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு கள் ஏற்பட்டுள்ளது. கிராமத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை விட, மிக அதிக ஆழத்தில் குவாரி பணிகள் செய்யப்பட்டுள்ளதால் கிணறு, ஆழ் குழாய் கிணறுகளில் உள்ள தண்ணீர் குவாரிக்கு வடிந்து விடுவ தால் விவசாயம் செய்ய இயல வில்லை என்று கூறுகின்றனர்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கனிமவளத் துறை, காவல்துறை, வட்டாட்சியர், நீர்வள ஆதாரத் துறை, வெடி மருந்து துறை ஆகி யோர் மாதம் தோறும் குவாரியை நிபந்தனைப்படி ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் மேற்படி துறை களில் உள்ள அதிகாரிகள் இதுவரை எந்த ஆய்வும் செய்யாமல் குவா ரிக்கு உடந்தையாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. விதிப்படி குவாரி நடத்தும் புல எண் கள், அனுமதி உள்ளிட்ட விவரங் களை கொண்ட பெயர் பலகை வைக்கவில்லை. சட்ட விரோதமாக வெட்டி எடுத்ததை மறைப்பதற்காக கடந்த மூன்று நாட்களில் 1500 லோடு எம் சாண்ட் கழிவுகளை குவாரி யில் கொட்டி நிரப்பி உள்ளனர். குவாரியைச் சுற்றிலும் அடிப்படை நிபந்தனையான வேலி கூட அமைக் கப்படவில்லை. 300 மீட்டருக்குள் 16 வீடுகள் இருந்த விபரங்களை மறைத்து குவாரிக்கு அனுமதி பெற்று இயக்கப்படுகிறது. இத்தகைய முறைகேடுகளுடன் இயங்கி வரும் தனியார் கல் குவாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி விஜயகுமார் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தனது சொந்த விவ சாய நிலத்தில் தொடங்கியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஆறாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயி விஜயகுமார், கடந்த இரண்டு ஆண்டுகளாக பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகிறார். மாவட்ட ஆட்சியர், கனிம வளத்துறை, வட்டாட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோ ரிடம் மனு கொடுத்தும், எவ்வித நடவ டிக்கையும் எடுக்காததால், குவாரிக்கு கொடுத்த உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இப்போ ராட்டத்தை நடத்தி வருகிறார். இவருடைய போராட்டத்திற்கு மனித உரிமை அமைப்புகள், விவ சாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரு கின்றனர். கிராம மக்களும், அருகில் உள்ள விவசாயிகளும் உடன் இருந்து அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.