districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஜவுளி கடையில் திருட்டு - 3 பேர் கைது

இளம்பிள்ளை, மே 16- ஜவுளி கடையில் சேலை திருடியதாக மூன்று பேர் கைது  செய்யப்பட்டனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.  சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகில் உள்ள இடங் கணசாலை நகராட்சிக்குட்பட்ட புவனகணபதி கோவில் அருகே ஜவுளி கடை வைத்திருப்பவர் காளிமுத்து. இவரது கடைக்கு திங்களன்று காரில் வந்த, 3 பேர், புடவை வாங்குவது போல் வந்து சேலையை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டனர். இதை கவனித்த ஊழியர்கள், காளி முத்து கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவர், கேமராவை பார்த்ததில் இரு பெண்கள், ஒரு ஆண் சேலையை திருடியது தெரிந்தது.  உடனே மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். இவர்கள் விசாரணை மேற்கொண்டு, திரு மங்கலத்தை சேர்ந்த முருகன் (55), திண்டுக்கல் கலா (65), தேனி மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி ஆகியோரை கைது செய்து, அவர்கள் வந்த டாடாசுமோ வாகனத்தையும் பறி முதல் செய்தனர். ஜவுளி கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திறப்பு

தருமபுரி, மே 16- ரூ.3 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கடத்தூர் ஊராட்சி ஒன் றிய அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் ரூ.3 கோடியே 9 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப் பட்டது. இந்த அலுவலக கட்டிடத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து ஆட்சியர் கி.சாந்தி, தருமபுரி நாடாளு மன்ற உறுப்பினர் செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் யசோதா மதிவா ணன், கடத்தூர் ஒன்றிய தலைவர் உதயா மோகனசுந்தரம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இழப்பீடு வழங்காமல் அலைக்கழிப்பு

ஈரோடு, மே 16- கொரோனாவால் கணவரை இழந்தவருக்கு கருணைத் தொகை வழங்காமல் அலைக்கழித்து வருவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. ஈரோடு, பவானி, கேசரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுசீலா. இவரது கணவர் சண்முகம் (51). கொரோனா தொற் றால் சண்முகம் கடந்த 2021 ஜுன் 25 அன்று ஈரோடு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். பின்னர் அரசு அறிவித்த கொரோனா இழப்பீட்டுத் தொகை ரூ.50 ஆயிரத்தை பெற  சுசீலா விண்ணப்பித்தார். 4 மாதங்களுக்குப் பிறகு மாவட்ட  வருவாய் அலுவலர் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளித்தார். ஆனால், 2 ஆண்டுகள் கடந்தும்  இன்று வரை சுசீலாவிற்கு  இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. எனவே, கொரோனா இழப்பீட்டுத் தொகை வழங்கிட ஆவண செய்ய  வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியரிம் முறையிட்டார். மனு அளிக்கையில், பாதிக்கப்பட்டவரோடு, சிபிஎம் பவானி தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம் உடனிருந்தார்.

இறந்த நிலையில் சிறுத்தைப்புலி மீட்பு

உதகை, மே 16- கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் இறந்த நிலை யில் கிடந்த சிறுத்தைப்புலியை வனத்துறையினர் மீட்ட னர்.  நீலகிரி மாவட்டம், கூடலூர், ராக்லேண்ட் தெரு அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் கடும் துர்நாற்றம் வீசியது. இத னால், சந்தேகமடைந்த பொதுமக்கள் தேயிலை தோட்டத் துக்குள் சென்று பார்த்தனர். அப்போது உடல் அழுகிய நிலை யில் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் கூடலூர் வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதன்பின் முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் வரவழைக்கப்பட்டு, சுமார் 6 வயதான அந்த ஆண் சிறுத்தைப் புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் பின் முக்கிய உடற்பாகங்கள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகத் துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சிறுத்தைப் புலி இறப்புக்கான காரணம் தெரியவில்லை. ஒரு வாரத் துக்கு முன்பு உயிரிழந்து இருக்கலாம். ஆய்வக அறிக்கை கிடைத்த பின்னரே சிறுத்தைப்புலி இறப்புக்கான காரணம் தெரியவரும், என்றனர்.

காட்டுயானை தாக்கி ஒருவர் பலி: மக்கள் ஆவேசம்

உதகை, மே 16- தேவர்சோலை அருகே காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானை, புலி, சிறுத்தை, கரடி என வனவிலங்குகள் அதிகமாக உள் ளன. மேலும், முதுமலை புலிகள் காப்பகம் ஒட்டி உள்ள பகுதி என்பதால் வனவிலங்கு கள் நடமாட்டம் அதிகம் காணப்படும். இந் நிலையில், திங்களன்று இரவு தேவர் சோலை அருகே உள்ள செம்பக்குழி பகுதி அருகே உள்ள சிறுமுள்ளி கிராமத்தைச் சேர்ந்த பழங் குடியினரான கரியன் என்பவரது மகன் குட் டன் (49) என்பவரை காட்டு யானை தாக்கிய தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகு றித்து தகவலறிந்த தேவர் சோலை காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் குட்ட ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக் காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வனத்துறை யினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே சிறுமுள்ளி கிராமப்பகுதி யில் தொடர்ந்து காட்டு யானைகளின் நட மாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கிராமப்பகுதியை சுற்றிலும் அகழி மற்றும் சாலை வசதிகளை அமைத்து தர வேண் டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கூடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற் றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களி டையே கூடலூர் கோட்டாட்சியர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

போதையில் விபத்து: டிரான்ஸ்பார்மர் மீது மோதிய கார்

சூலூர், மே 16- இருகூர் அருகே மதுபோதையில் ஓட்டிச்சென்ற காரை டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்து ஏற்படுத்திய நிலையில், மின்சாரம் துண்டிக்கப் பட்டதால் பொதுமக்கள் அவதிக் குள்ளாகினர். கோவை மாவட்டம், இருகூர் சாலை இரட்டை புளியமரம் அருகே உள்ள டாஸ்மாக் கடை உள்ளது. இந்நிலையில், அந்த கடைக்கு மது வாங்குவதற்காக முழு போதையில் காரை வேகமாக இயக்கி வந்து டாஸ்மாக் கடையின் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. இதில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததுடன், காரின்  மீது டிரான்ஸ்பார்மர் சரிந்தது. இதனால்  அந்த பகுதி முழுவதும் மின் இணைப்பு  துண்டிக்கப்பட்டது. இதையடுத்து உடன டியாக அப்பகுதியில் இருந்த மக்கள் முழு போதையில் இருந்த அந்த நபரை மீட்டு அமர வைத்தனர். இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைய டுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட னர். போதை ஆசாமியின் செயலால் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

சட்டவிரோத கனிமங்கள் கடத்தல் மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

கோவை, மே 16- கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கோவை மாவட்டத்தி லிருந்து கேரளா மாநிலத்திற்கு அனுமதியின்றி கனிமங்கள் கொண்டு செல்லப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து, மாநில எல்லைகளில் கனிமங்களை ஏற்றிச்செல்லும் வாகனங் களை ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண் காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில், மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடி களில் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் மார்ச் 2023 வரை 1254 வாகனங்கள் ஆய்வு  செய்யப்பட்டுள்ளது. 2022-2023 ஆம் நிதி ஆண்டில் சார் ஆட்சி யர், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், சுமார் 33 வாக னங்களும், காவல்துறையின் மூலம் 5 வாகனங்களும்,  பறக் கும் படையின் மூலம் 1 வாகனம் மற்றும் கனிம வளத்துறையி னர் மூலம் 32 வாகனங்கள் என 71 வாகனங்கள் பிடிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வட் டார போக்குவரத்து அலுவலர்களால் சுமார் 98 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதிக பாரம் ஏற்றிச்சென்றதற்காக அப ராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் உரிய அனுமதியின்றி கனிமங்கள் கொண்டுசென்றதற்காக சிறப்பு பறக்கும் படையின் மூலம் 15 வாகனங்கள் மற்றும்  கனிம வளத்துறையினர் மூலம் 3 வாகனங்கள் பிடிக்கப்பட்டது. வட்டார போக்குவரத்து துறையால் 21 வாகனங்கள் பிடிக்கப் பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று, மாவட்டத்தில் 12க்கும் மேற்பட்ட குவாரி கள் ஆய்வு செய்து, 8 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப் பட்டு உரிய அபராத நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட் டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணி

தருமபுரி, மே 16- மொரப்பூர் வனச்சரகத்தில் மரக்கன்று கள் நடும் பணி ஜூன் மாதத்தில் துவங்க  உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ள னர். தமிழ்நாட்டில் பாழடைந்த 33.290 ஹெக் டேர் வன நிலத்தை அடுத்த 5 ஆண்டுகளில் மீட்கும் வகையில் பாதிக்கப்பட்ட காடுகளின் மறுசீரமைப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி விவசாயம் மற் றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி ரூ.457 கோடி கடனுதவி அளித்து, பாதிக்கப் பட்ட காடுகளின் மறுசீரமைப்புத் திட்டத்தை  செயல்படுத்துகிறது. மாநிலம் முழுவதும் இத் திட்டத்தின் கீழ் மொத்தம் 33.50 லட்சம் மரக் கன்றுகள் நடப்படும் எனவும், குறைவான அடர்த்தி கொண்ட வனப்பகுதிகள் மற்றும் நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்காக, முக்கி யமான நீர்நிலைகளின் காடுகள், இந்த திட்டத் தின் கீழ் கண்டறியப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் வனச்சரகத்தில் 2023-24 ஆம் ஆண்டு இத் திட்டத்தின் கீழ் மர அடர்த்தி குறைந்த 700  ஹெக்டேர் காப்பு காடுகள், பொம்மிடி அருகே யுள்ள கவரமலை காப்பு காட்டுப்பகுதியில் கண்டறிப்பட்டுள்ளது. இதில் ஆங்காங்கே அடர்த்தி குறைந்த பகுதிகளில் வேங்கை, கள் ளச்சி, சந்தனம், தேக்கு, வேம்பு, புங்கன், புளி, நெல்லி உள்ளிட்ட 13 வகையான மரக்கன்று கள் சுமார் 70 ஆயிரம் நடப்பட உள்ளது. வரும்  ஜூன், ஜூலை மாதங்களில் மரக்கன்றுகள் நடவுப்பணி தொடங்க உள்ளது. இத்திட்டத்தின் மூலம் வனப்பகுதியில் இன்னும் சில ஆண்டுகளில் மரங்களின் அடர்த்தி அதிகரிக்கும் வாய்புள்ளதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதேபோல் அரூர் வனச்சரகம், கோட்டப்பட்டி வனச்சர கம் உள்ளிட்ட வனசரகங்களிலும் இத்திட்டத் தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக வும், இதற்கான வனகாப்பு காடுகள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் வனத்துறையி னர் தெரிவித்துள்ளனர். இதற்காக தற்போது வனத்துறையினரின் நர்சரிகளில் மரக்கன்று கள் தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வரு வதாக தெரிவித்துள்ளனர்.

மின்தடை

நாமக்கல், மே 16- நாமக்கல், கெட்டிமேடு துணைமின் நிலையத்தில் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இத னால் பொன்னேரி, காளி செட்டிப்பட்டி, அ.பாலப் பட்டி, ஈச்சவாரி, பொம்ம சமுத்திரம், கெட்டிமேடு, பொட்டிரெட்டிப்பட்டி, பீம நாயக்கனூர், பெருமாப் பட்டி, தூசூர், கொடிக்கால் புதூர் ஆகிய பகுதிகளில் புத னன்று (இன்று) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கல்குவாரியில் சட்டவிரோத வெடி வைப்பால் மூன்று முறை நில அதிர்வு: விவசாயி புகார்

திருப்பூர், மே 16 – காங்கேயம், ஊத்துக்குளி வட்டாரத்தில் கல் குவாரிகளில்  சட்டவிரோதமாக, அளவுக்கு அதிகமாக வெடி வைத்து பாறை களைத் தகர்த்ததால், காங்கேயம் உள்ளிட்ட இந்த வட்டாரத் தில் மூன்று முறை நில அதிர்வு ஏற்பட்டதாக, அப்பகுதி யில் பாதிக்கப்பட்ட விவசாயி நடராஜன் புகார் அளித்துள் ளார். காங்கேயம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவல கத்தில், கடந்த ஏப்ரல் 29 அன்றும், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் மே 3 அன்றும், வெங்கலபாளையம் பழ னிச்சாமி கல்குவாரியின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விவசாயி நடராஜன் புகார் கூறியிருந்தார்.  இந்த புகார் தொடர்பாக மே 15 திங்களன்று காங்கேயம்  துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில்  விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி திங்களன்று காங்கேயம் டிஎஸ்பி அலு வலகத்தில் விவசாயி நடராஜன் ஆஜராகி வாக்குமூலம் அளித் தார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கி ணைப்பாளர் முகிலன் உடன் பங்கேற்றார். விவசாயி நடராஜன் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 2  ஆண்டு காலமாக, சட்டவிரோத, கல்குவாரிகளின் முறை கேடான செயல்பாட்டால், காங்கேயம் பகுதிகளில் கடந் தாண்டு 3 முறை நில அதிர்வு ஏற்பட்டது, இந்தாண்டு மிக  அதிகப்படியான வெப்பம் கரூர், பரமத்தி மற்றும் காங் கேயம் பகுதிகளில் நிலவுவதற்கும் கல்குவாரிகளில் சட்ட விரோதமாக, அளவுக்கு அதிகமாக வெடி வைத்து பாறை களைத் தகர்த்ததும் காரணமாக அமைந்துள்ளது என்று ஆதா ரத்துடன் தெரிவித்தார். எனவே, உடனடியாக சட்டவிரோத கல் குவாரி மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள் ளார்.

உடுமலையில் சித்திரைத் திங்கள் இலக்கிய நிகழ்வு

உடுமலை, மே 16- உடுமலைப்பேட்டையில், இலக்கியக் களத்தின் சார்பில்  சித்திரைத் திங்கள் இலக்கிய நிகழ்வு, பசுபதி வீதியில் உள்ள  மீனாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு, பட்டிமன்ற பேச்சாளர் சுடர் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் இலக்கி யக் களத் தலைவர் செல்லத்துரை  வரவேற்றார். பழனி  ஆண்டவர்  கலை பண்பாட்டுக் கல்லூரியின் பேராசிரியர்  மீனா சுந்தர் தகழி சிவசங்கரப் பிள்ளையின்  “தோட்டியின்  மகன்” என்ற நாவலை மதிப்பாய்வு செய்து உரையாற்றினார்.  பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் செயலாளர் கவிஞர் இரா . பூபாலன் “நீரின் திறவுகோல் “என்னும் மொழிபெயர்ப்பு கவிதை நூலை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். எழுத்தா ளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க  மாவட்ட செயற்குழு உறுப்பினருமான தோழன் ராசா, பகத்சிங்  துர்கா பாபிக்கு எழுதிய கடிதத்தை  அறிமுகம் செய்து உரை  நிகழ்த்தினார்.  இந்த கலந்துரையாடலில் அரசு கல்லூரி முனைவர் பட்ட  ஆய்வு மாணவர் சதீஷ்குமார், எழுத்தாளர் தெய்வானை, ராம சாமி ஆகியோர்  பங்கு பெற்றனர். இதில், 40-க்கும் மேற்பட்ட  இலக்கிய ஆர்வலர்கள் கூட்டத்தில் கலந்து  கொண்டனர். முடி வில் சிவஞானம் நன்றி கூறினார்.

சாலை விபத்தில் தந்தை, மகன் பரிதாப பலி

தாராபுரம், மே 16 - தாராபுரம், கோவிந்தாபுரம் அருகே உள்ள மாந்தியா புரத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து (53) மற்றும் இவரது மகன்  செல்வக்குமார் (30). இருவரும் மரம் வெட்டும் தொழிலாளர் கள். இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் உப்பாறு  ஆலாம்பாளையம் செல்ல தாராபுரம் - திருப்பூர் சாலையில்,  காங்கேயம் பிரிவு அருகே வந்தபோது கோவை, கண பதியைச் சேர்ந்த மணிவண்ணன் (42) குடும்பத்துடன் மது ரைக்கு சென்று கொண்டிருந்த கார், தொழிலாளர்களின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சிக்கிய தந்தை, மகன் இருவரையும் தாராபுரம் அரசு மருத்துவ மனைக்கு காவலர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால், இரு வரும் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரி வித்தனர்.  இதுகுறித்து தாராபுரம் காவல் ஆய்வாளர் மணி கண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  இதில், காரை ஓட்டி வந்த மணிவண்ணன் காயமடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார்.

உடுமலையில் யானைகள் கணக்கெடுக்கும் பயிற்சி வகுப்பு

உடுமலை, மே 16 - உடுமலையில் யானைகள் கணக்கெடுக் கும் பணிக்கான பயிற்சி வகுப்பு செவ்வா யன்று நடைபெற்றது. மே 17 முதல் 19 வரை  மூன்று நாட்கள் கணக்கெடுப்பு பணி நடை பெறவுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர்  வனக்கோட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுக ளிலும் இக்கணக்கெடுப்பு பணி நடைபெற  உள்ளது. 17 ஆம் தேதி பிளாக் கவுண்ட் முறை யில் சுற்றுகளில் 15 கிலோ மீட்டர் தூரம் நடந்து  நேரடியாக யானைகள் கணக்கிடும் முறை  செய்யப்படும். பின்னர்  18 ஆம் தேதி  2 கிலோ  மீட்டர் நேர்கோட்டுப் பாதையில் நடந்து  யானைகளின் சாணம் மூலமாக மறைமுக  கணக்கெடுப்பு பணி நடைபெறும். 19ஆம்  தேதி நீர்நிலைகளுக்கு அருகில் இருந்து  நேரடி முறையில் யானைகளின் எண் ணிக்கை கணக்கீடு செய்யப்படும். இந்த  கணக்கெடுப்பு பயிற்சிக்காக களப்பணியா ளர்களுக்கு  பயிற்சி வகுப்புகள் மற்றும் தரவு  சேகரிப்பு புத்தகம் வழங்கப்பட்டது.   திருப்பூர் மாவட்ட வனக் கோட்ட உதவி  வன பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர்   கணேஷ் ராம்  தலைமையில் இப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 

அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:26.91/60அடி நீர்வரத்து:3கன அடி
வெளியேற்றம்:27கன அடி
அமராவதி அணை நீர்மட்டம்:62.11/90அடி.நீர்வரத்து:87கனஅடி
வெளியேற்றம்:13கன அடி

நண்பர் இறந்த துக்கத்தில் இளைஞர்  தற்கொலை

அவிநாசி, மே 16- அவிநாசி, பாரதிதாசன் வீதியில் வசித்து வருபவர்  அரியலூர் மாவட்டம், உடை யார்பாளையத்தைச் சேர்ந்த  பாரி மகன் ரஞ்சித்குமார்(29). இவரது நண்பர் கௌதம்  என்பவர் அண்மையில் விபத் தில் உயிரிழந்து விட்டார்.  இதனால் மனமுடைந்த ரஞ் சித்குமார் கடந்த 5 ஆம் தேதி  மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை முயற்சி யில் ஈடுபட்டுள்ளார். இதை யறிந்த  பெற்றோர், ரஞ்சித் குமாரை மீட்டு கோவை அரசு  மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதித்தனர்.  இந்நிலையில் சிகிச்சை பல னின்றி திங்களன்று இரவு  ரஞ்சித்குமார் உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இருசக்கர வாகனம் திருட்டு; கைது

தாராபுரம், மே 16 - தாராபுரத்தில், காவல் துறையினர் வாகன தணிக் கையில் ஈடுபட்டனர். அப் போது, இருசக்கர வாகனத் தில் வந்த பழனி, நெய்க்கா ரன்பட்டியைச் சேர்ந்த அமீர்  அம்ஜா என்பவரிடம் நடத் திய விசாரணையில் இரு சக்கர வாகன திருட்டில்  ஈடுபட்டது தெரியவந்தது.  மேலும், இவர் மீது கோவை,  திருப்பூர், ஈரோடு, திண்டுக் கல் மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட வாகன திருட்டு  வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள் ளது. இதையடுத்து அமீர்  தாராபுரம் குற்றவியல் நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி சிறை யில் அடைக்கப்பட்டார்.

ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி

சேலம், மே 16- சேலம், ஓமலூர் அருகே உள்ள நல்லாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த வையா புரி மற்றும் இரண்டு குழந்தை கள் உட்பட 15 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர் கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். அங்கு பாது காப்பு பணியிலிருந்த காவல் துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தி, பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், தற்கொலைக்கு முயன்றவர் கள் கூறுகையில், பாகல் பட்டி பகுதியில் 25 சென்ட் பூர் வீக நிலம் உள்ளது. அதில் நாங்கள் வீடு கட்டி வசித்து  வந்த நிலையில், பாகல்பட்டி கிராம நிர்வாக அலுவலர், “நிலத்தை அனுபவிக்க வேண் டும் என்றால், ரூ.30 லட்சம்  தர வேண்டும். இல்லை யென்றால் நிலத்தை விட்டு செல்ல வேண்டும்” என மிரட்டி வருகிறார். இதுகுறித்து போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. இதற்கிடையே கிராம நிர்வாக அலுவலர், அடியாட்களை வைத்து எங் கள் வீட்டை இடித்து பொருட் களை அள்ளி சென்றுவிட் டார். தற்போது குடியிருக்க இடம் இல்லாமல் தவித்து வரும் நிலையில், எங்கே வாழ்வது என்று தெரியாமல் உள்ளதாகவும், வாழ்வதை விட இறப்பதே மேல் என நினைத்து எங்கள் குடும்பத் தைச் சேர்ந்த 15 பேரும் தற்  கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர். எனவே மாவட்ட நிர்வாக மும், காவல் துறையும் எங்களது நிலத்தை மீட்டு தர வேண்டும். மேலும், அடியாட் களை வைத்து மிரட்டும்  கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் தெரிவித்தனர்.

ரூ.1 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்

உதகை, மே 16- கூடலூர் அருகே உள்ள மங்குழியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்குட்பட்ட மங்குழியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆற்றின் குறுக்கே மிகப்பழமையான பாலம் இருந்தது.  அந்த பாலம் பழுதடைந்து காணப்பட்டதால், எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற அச்சம் நிலவியது. இதையடுத்து கடந்தாண்டு பெய்த கன மழையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது பாலம் உடைந்து அடித்து சென்றது. இதில், பாலத்தில் நின்றிருந்த பொதுமக்கள் சிலர் ஆற்றுக்குள் தவறி விழுந்து மீட்கப்பட்டனர். இதற்கிடையே பாலம் உடைந்து விழுந்ததால், மங்குழியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி கூடலூருக்கு சென்று வந்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு கூடலூர் நகராட்சி நிர்வாகம் ரூ.1 கோடியே 13 லட்சம் நிதி ஒதுக்கியது. தொடர்ந்து அப்பகுதியில் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. இதனால் பாலம் கட்டுமான பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் முன்கூட்டியே மழை பெய்ய தொடங்கினால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து கட்டுமான பணி தொடர்ந்து நடைபெறுவதில் தடங்கல் ஏற்படலாம். மழையை பொறுத்து பாலம் கட்டுமான பணி நடைபெறும், என்றனர்.

கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு: காவல் துறை அதிரடி

உதகை, மே 16- கோத்தகிரி அருகே காவல் துறை தேடுதலில் 500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு, அழிக் கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செம்மனாரை பகுதியில் கள்ளச்சாரா யம் காய்ச்சுவதாக காவல் துறையின ருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில், சுமார் 500 லிட்டர் சாராய ஊறல் மற்றும் ஐந்து லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது கண்டறி யப்பட்டது. இதையடுத்து சாராய ஊறலை அழித்த காவல் துறையினர், சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் பகுதியைச் சேர்ந்த பெரு மாள் (45), கோத்தகிரி, செம்மனா ரைப் பகுதியைச் சேர்ந்த பாலன் (71), ஆகியோரை கைது செய்தனர். இதேபோன்று, சேலம் மாவட்டத் தில் பல்வேறு இடங்களில் தீவிர தேடு தல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக, வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் சின்ன கல்வராயன் மலை கரிய கோயில்  பாச்சேடு கிராமத்தில் கள்ளச்சாராயம் காட்சி விற்பனை  செய்யப்பட்டு வருவதாக கிடைத்தது. தகவலின் பெயரில் அப்பகுதிக்குச் சென்ற போலீசார் அங்கு ஒரு பேரல்  200 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை இருந்ததை கண்டுபிடித்து, அதை கீழே கொட்டி அழித்தனர். கள்ளச் சாராயம் காட்சிய நபரை தனிப் படை போலீசார் தீவிரமாக தேடிக் கொண்டு வருகின்றனர்.  இதேபோல, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அலங்கியம்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கயம்பாளையம் பகுதியில் ஒரு வரது வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக அலங்கியம் போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. தகவ லின் பேரில் அலங்கியம் போலீசார் காங்கேயம்பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன்  மணிகண்டன் (42) என்பவரது வீட்டினை சோதனை யிட்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்து 10 லிட்டர் சாராய உறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் விற்பனைக்காக வைத்திருந்த 2 லிட்டர் சாராயத்தை போலீசார் பறி முதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த னர்.

போதை மாத்திரை விற்றவர் கைது

கோவை, மே 16- போதை மாத்திரை விற்றவர் கோவையில் கைது செய் யப்பட்டுள்ளார். கோவை, ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை அருகே ஒருவர் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தக வல் கிடைத்துள்ளது. அதன்பேரில், ஞாயிறன்று ஆர்.எஸ். புரம் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்ட னர். இதில் சந்தேகத்தின்பேரில், அங்கிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில்  அளித்தார். அவரிடம் சோதனை செய்த போது அவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.  இதனையடுத்து, போலீசார் போதை மாத்திரை விற்பனை செய்த கோவை வேடம்பட்டி நம்பிஅழகன் பாளையத்தை சேர்ந்த பெயிண்டர் விஷ்ணு (26) என்பவரை கைது செய்த னர். அவரிடமிருந்து 10 போதை மாத்திரைகள் மற்றும் 10  சிரிஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் விஷ்ணு கைது  செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

வால்பாறையில் கோடை விழா

கோவை, மே 16- வால்பாறையில் வருகிற 3 நாட்களுக்கு கோடை விழா நடத்த கோவை மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள் ளது. அந்த வகையில், வால் பாறையில் வருகிற மே 26, 27, 28  ஆகிய மூன்று நாட்கள்  மலர் கண்காட்சியுடன் கோடை விழா நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ள தாக தெரிகிறது. இதில் அமைச் சர் வி.செந்தில்பாலாஜி உள் ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.