districts

img

மலை காய்கறிகளின் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

நீலகிரி, ஜன.3- வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து அதிகரித்து உள் ளதால், நீலகிரி மலை காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலை விவ சாயம் பிரதானமாக உள்ளது. இதற்கு  அடுத்தபடியாக ஏராளமான விவசா யிகள் காய்கறிகளை பயிரிட்டு வரு கின்றனர். வழக்கமாக நவம்பர்,  டிசம்பர் மாதங்களில் பனிப்பொ ழிவு அதிகம் இருக்கும் என்பதால்,  விவசாயிகள் தங்களது விளைநி லங்களை தரிசாக வைத்திருந்து, ஜனவரி மாதம் முதல் விவசா யத்தை தொடங்குவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் கடந்த 2 மாதங்களாக கோத்தகிரி பகுதி யில் உறைப்பனியின் தாக்கம் இல்லா ததாலும், போதுமான மழை பெய்த தாலும் தங்களது தோட்டங்களில் தொடர்ந்து மலை காய்கறிகளை பயி ரிட்டு வந்தனர்.  மேலும், காய்கறிகளுக்கு போது மான கொள்முதல் விலையும்  கிடைத்து வந்தது. மேட்டுப்பா ளையம் காய்கறி மண்டிகளில் கடந்த  மாதம் கேரட், பீட்ரூட் கிலோவுக்கு சராசரியாக ரூ.40 முதல் ரூ.60 வரை  கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.  ஆனால், தற்போது கேரட் மற்றும் பீட்ரூட் கிலோவுக்கு ரூ.25  முதல் ரூ.30 வரையும், முட்டை கோஸ் ரூ.5 வரையும் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், காய்க றிகளை பயிரிட்டுள்ள விவசாயிக ளுக்கு, அதற்காக செலவழித்த அசல் தொகை கூட கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.