தருமபுரி, மே 12- அனுபவத்தில் உள்ள கூலி தொழிலாளர் களின் நிலத்தை ஆக்கிரமிப்பு என்ற பெய ரில் வருவாய்த்துறையினர் வெளியேற்றி யுள்ளனர். இச்செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தருமபுரி வட்டம், இலக்கியம்பட்டி ஊராட் சிக்குட்பட்டது வி.ஜெட்டிஅள்ளி கிராமத்தில், லட்சுமி(எ) ராஜலட்சுமிக்கு சொந்தமான நிலம் சர்வே எண் 578,579 உள்ளது. தருமபுரி நகரத்தையெட்டி உள்ள இந்நிலத்தில், இப் பகுதி மக்கள்சுமார் 50 ஆண்டுகாலமாக நில உரிமையாளரின் அனுமதியோடு வசித்து வருகின்றனர். இந்த நிலத்தை பண்படுத்தி பாதுகாத்த இம்மக்களே இந்நிலத்தை அனு பவிக்கட்டும் என நில உரிமையாளரும் அனு மதித்துள்ளார். இந்நிலையில், தருமபுரி மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் நலத்துறை, லட்சுமி (எ) ராஜ லட்சுமிக்கு சொந்தமான நிலம் சர்வே எண் 578,579 ஆர்ஜிதம் செய்துள்ளனர். பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அர்ஜிதம் செய்த இடத்தை தருமபுரியில் உள்ள சில மோசடி கும்பல்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு சில அதிகாரிகள் துணையுடன் தகுதி இல்லா தவர்களுக்கு மனைப்பட்டா வழங்கப்பட்ட தாக தெரிகிறது. இச்சூழ்நிலையில், பூர்விகமாக உள்ள அப்பகுதி மக்களுக்கு அவர்கள் அனுபவித்து வரும் இடங்களுக்கு மனைப்பட்டா வழங்கா மல், அனுபவத்தில் இருந்து வருபவர்களை வெள்ளியன்று வருவாய்த்துறை அலுவலர் களும், காவல்துறை அதிகாரிகளும் சேர்ந்து அம்மக்களை வெளியேற்றினர். சிபிஎம் கண்டனம் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலத்தை அனுபவித்து வரும் மக்களை வெளியேற்று வது கண்டிக்கத்தக்கது, இதை எதிர்த்த வர்களை பெண்கள் என்றும் பாராமல் போலீ சார் அடித்து, வாகனத்தில் ஏற்றி சென்றுள்ள னர். அனுபவ நிலத்தில் இருந்துவரும் அதே பகுதி மக்களுக்கு அனுபவ நிலங்களுக்கான பட்டா வழங்க வேண்டும். பெரும் முதலாளி கள் தனக்கு தேவை பட்ட தகுதியில்லாத நபர்களுக்கு சில அதிகாரிகள் துனையிடன் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதனை விசா ரணை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகத்தை யும், மாநில அரசையும் வலியுறுத்தியுள்ளது.