districts

img

நோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்

கோவை, பிப்.26-

கோவையில் இயங்கி வரும் ஈஎஸ்ஐ  மருந்தகங்கள், நோயாளிகள் பெரும் அலைகழிப்பிற்கு உள்ளாக்கி, மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக புகார் கள் எழுந்திருக்கின்றன.

கோவை மாநகரம், இராமநாதபுரம் பகுதியில் ஈஎஸ்ஐ மருந்தகம் செயல் பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில்  நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல் கின்றனர். தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் நலனுக் காக ஏற்படுத்தப்பட்ட இந்த மருந்தகங் களில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அலைகழிப்பிற்கும், மனஉளைச் சலுக்கும் அங்கிருக்கும் மருத்துவர்கள் உள்ளாக்குவதாக தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக அம்மருந்தகத்தில் சிகிச்சைக்காக வந்த பெண் ஒருவர் கூறு கையில், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் எனக்கு அண்மையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அறுவைச் சிகிச்சை மேற் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால், கோவையில் இயங்கி வரும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை தற்போது கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள் ளதால் அங்கு அறுவை சிகிச்சை மேற் கொள்ள மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச் சையை மேற்கொண்டேன்.     இதன்பின்னர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறி வுறுத்திருந்ததால் சுமார் 10 நாட்கள் வீட்டில் ஓய்வில் இருந்தேன். இந்த விடுப்பில் இருந்த நாட்களுக்கு பணி யிடத்தில் ஊதியம் பிடிக்கப்படும் நிலை யில், இஎஸ்ஐ காப்பீட்டு அட்டை மூலம் ஊதியத்தை திரும்பப் பெற கோவை இராமநாதபுரத்திலுள்ள மருந்தக மருத்து வர்களை அணுகினேன். அங்கிருந்த மருத்துவர்கள், கோவை சிங்காநல்லூரி லுள்ள ஈஎஸ்ஐ அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களை பார்த்து வருமாறு அனுப்பினர். அங்கு சென்றபோது, எனக்கு மேற்கொண்ட அறுவை சிகிச்சைகளை கேட்டறிந்த மருத்துவர்கள் 15 நாட்கள் முழு ஓய் விற்கும், விடுப்பு அனுமதிக்கும் பரிந் துரைத்தனர்.

இதன்படி ஊதிய விடுப்பு அனுமதி கடிதம் பெற மீண்டும் இராமநாதபுரம் மருந்தகத்திற்கு சென்றேன். ஆனால், அங்கு பணியிலிருந்த மருத்துவர்கள், தலைமை மருத்துவமனை மருத்து வர்களின் பரிந்துரையை ஏற்க முடியாது. வெறும் 3 நாட்களுக்கு மட்டுமே ஊதிய விடுப்பு அளிக்க முடியும் என அதற் கான அனுமதி கடிதம் வழங்கினர். இது குறித்து முறையிட்டபோது முறையாக பதிலளிக்காமல், மிகவும் தரக்குறைவாக பேசுகின்றனர் என  வேதனையோடு தெரி வித்தார்.

இதே போன்று பல்வேறு நோய் களுக்கு சிகிச்சை பெறும் தொழி லாளர்களை அங்கிருக்கும் மருத்துவர் தொட்டுக்கூட பரிசோதிப்பதில்லை. இதனால் தொடர்ந்து இந்த மருந் தகத்தில் நோயாளிகள் மருத்து வருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்று பாதிப்பிற்கு பின்னர் சமீப காலமாக சிகிச்சைக்கு வரும் நோயா ளிகளை தொட்டு பரிசோதிக்கக்கூட மருத்துவர்கள் தயங்கி வருகின்றனர். நோயாளிகளை பல அடி தூரம் தள்ளி நிற்க வைத்தே பேசி அனுப்புகிறார். பரி சோதிக்காமலே மருந்து மாத்திரைகளை வழங்க பரிந்துரை செய்கிறார். இவ்வாறு  நவீன தீண்டாமையை கடைபிடிப்பதால், ஏன்தான் சிகிச்சைக்கு வந்தோமோ என மனம் நொந்து திரும்பிச் செல்லும் நிலைதான் எங்களுக்கு ஏற்படுகின்றன என்கின்றனர் தொழிலாளர்கள்.

இத்தகைய அவல சூழலுக்கு முடிவு கட்ட சம்மந்தப்பட்ட இஎஸ்ஐ மருத்துவ மனை உயர் அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பதே இ எஸ்ஐ காப்பீட்டாளர்களின் கோரிக்கை யாக உள்ளது.