districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி 10 கோரிக்கைகள் சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரை

ஈரோடு, அக். 13- சட்டமன்ற தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப் படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகளை முன்னு ரிமைப்படுத்தி, மாவட்ட ஆட்சியர்களுக்குப் பரிந்துரைப் பட்டியலை அனுப்பி வைக்குமாறு அனைத்துச் சட்டமன்ற  உறுப்பினர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  கடிதம் எழுதியிருந்தார். அதன்படி, மாவட்ட ஆட்சியரிடம் ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதியில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள  கோரிக்கைகளாக  பாதாள சாக்கடை மற்றும் ஊராட்சிக் கோட்டை குடிநீர் திட்டப் பணிகளால் சேதமடைந்த சாலை களையும் சிமெண்ட் தளங்களையும் புதிதாக அமைக்க வேண்டும். முதல்வரின் தொலைநோக்கு திட்டமான சாயப் பட்டறை மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளி யேற்றப்படும் நீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்தம்  செய்து கடலில் சென்று கலக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு மாநகர மையப் பகுதிகளில் மழை வெள்ள நீர் தேங்கி, கடை களிலும், பள்ளிக்கூடங்களிலும் புகுவதை தடுக்கும் பொருட்டு  புதிதாக திட்டம் வகுக்கப்பட்டு சாக்கடை கால்வாய்கள் அமைத்தல், தூர்வாருதல் பணிகளை செயல்படுத்த வேண்டும். தொகுதிக்குட்பட்ட வணிக பகுதிகளில் போக்கு வரத்து நெரிசல்களை தீர்க்கும் பொருட்டு தாலுகா அலுவ லகம் அருகில் அரசுக்கு சொந்தமான காலியாக உள்ள இடத்தில் நவீன வாகனம் நிறுத்தம் அமைக்க வேண்டும்.  வ.உ.சி. பூங்கா மைதானத்தை மீண்டும் புனரமைத்து மாணவர், இளைஞர் விளையாட்டு மைதானம் மற்றும் நவீன  உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும். மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள சுமார் 3,000 குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கு அனைத்து வகையான அரசு ஆவ ணங்கள் இருந்தும் பட்டா இல்லாததால் மேற்கண்ட பகுதி களுக்கு பட்டா வழங்கி தீர்வு காண வேண்டும். அக்ர ஹாரம் பகுதியில் துணைமின் நிலையம் அமைக்க வேண்டும்.  மாநகரப் பகுதியில் புதிதாக பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்க வேண்டும். மேட்டூர் ரோடு முதல் பேருந்து நிலையம்  வரை மேம்பாலம் அமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.  திடக்கழிவு மேலாண்மை பணிகளை  மேம்படுத்தும் வகையில் அக்ரஹாரம், வீரப்பன்சத்திரம், குமலன்குட்டை மற்றும் கோட்டை, பெரியார் நகர், கருங்கல்பாளையம் பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து எடுத்துச்செல்ல இடங்கள் தேர்வு செய்ய வேண்டும் என  சட்டமன்ற உறுப் பினர் திருமகன் ஈவேரா மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை  பட்டியலை கொடுத்துள்ளார். 

தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சிறுவன்

ஈரோடு, அக்.13- சத்தியமங்கலத்தில் தாயின் தலையில் கல்லை போட்டு  14 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தனது மகன்  சரியாக படிக்காததால் விடுதியில் சேர்க்க தாய் யுவராணி திட்டமிட்டிருந்தார். விடுதியில் சேர விருப்பமில்லாத 9ஆம்  வகுப்பு படிக்கும் மாணவர் தாயுடம் தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,  புதனன்று இரவு அனைவரும் தூக்கச் சென்ற பிறகு, ஹாலோ பிளாக் கல்லை எடுத்து தாயின் தலையில் மகன்  போட்டுள்ளார். இதில், பலத்த காயமடைந்த தாய் யுவராணி உயிரி ழந்தார். தாயை கொன்ற சிறுவனிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்க மானியம்

சேலம், அக்.13- சேலம் மாவட்டத்தில் மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைத்திட தாட்கோ மூலம் மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின்  பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 50 உறுப்பினர் களைக் கொண்ட மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க சேலம் மாவட்டத்திற்கு ஒரு  ஆதிதிராவிடர் மகளிர் மற்றும் ஒரு பழங்குடியின மகளிருக்கு  தலா ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத் திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரின் அறிவிப்பில், 36 ஆதிதிராவிடர்களுக்கும், 4 பழங்குடியினருக்கும் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 50 உறுப்பினர் களைக் கொண்ட மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்  கூட்டுறவுச் சங்கங்கள் அமைத்திட ஆணையிடப்பட்டுள்ளது. இதில் சேலம் மாவட்டத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் தலா ஒரு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச்  சங்கத்திற்கு மானியம் ரூ.ஒரு லட்சம் வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க  வேண்டும். கறவை மாடு வைத்துள்ள மற்றும் பால் உற்பத்தி யாளர் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக உள்ள  மகளிர் இத்திட்டத்தில் பயன்பெறலாம், என தெரிவிக்கப்பட் டுள்ளது.

வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு

ஈரோடு, அக். 13- ஈரோடு மாவட்டத்தில் ஊரக பகுதிகளில்  உள்ள வீடு களுக்கு குடிநீர் இணைப்பு பெற பங்களிப்புத் தொகை குறித்து  மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.  அதன்படி, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ஊரக பகுதி களில் வழங்கப்படும் வீட்டு குடிநீர் இணைப்பு பணிகளுக்கு பொதுப்பிரிவு குக்கிராமங்களுக்கு மொத்த மதிப்பீடு தொகை யில் 10 விழுக்காடு வீதம் செலுத்த வேண்டும். இதர (எஸ்சி, எஸ்டி) மலைவாழ் மற்றும் வனப்பகுதி குக்கிராமங் களுக்கு மொத்த மதிப்பீடு தொகையில் 5 விழுக்காடு வீதம்  பொது மக்கள் பங்களிப்பு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை பணமாகவோ, பொருளாகவோ அல்லது உடல்  உழைப்பின் மூலமாகவோ செலுத்தலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. 

 கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

கோவை, அக்.13- கோவை பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்ற 3 பேரை  போலீசார் கைது செய்துள் ளனர்.  கோவை அன்னூரில் கஞ்சா விற்பனை நடைபெறு வதாக கிடைத்த தகவலின்  அடிப்படையில்  போலீசார்  வாகன சோதனை ஈடுபட் டனர். அப்போது  கேரளா வைச் சேர்ந்த சதீஷ்குமார்  (34), மதுரை மாவட்டத்தைச்  சேர்ந்த நல்லசாமி (30) மற்றும் சின்ன தடாகம் பகுதி யைச் சேர்ந்த சுரேஷ் குமார் (33)ஆகிய மூவரை யும் கைது செய்தனர்.

லஞ்சத்தை பிரிப்பதில் தகறாறு  காவல் அதிகாரிகள் ஆயுதபடைக்கு மாற்றம்

சேலம், அக்.13- சேலத்தில் காதல் ஜோடியை சேர்த்து வைக்க மகளிர் காவல்  நிலையத்தில் லஞ்சம் வாங்கிய  காவல் பெண் அதிகாரிகள் ஆயுத படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். முன்னதாக வாங்கிய லஞ்சத்தை பங்கு பிரிப்பதில் காவல் நிலையத் திற்குள்ளேயே தகறாறு ஏற்பட்ட நிலையில் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சேலம் டவுன் மகளிர் காவல்  நிலையத்தில் உதவி ஆய்வாளராக மேனகாவும், சிறப்பு உதவி ஆய் வாளராக சுமதி, காவலர் அம்ச வள்ளி ஆகியோர் பணியாற்றி வந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி தஞ்சம்  அடைந்தது. இதையடுத்து காவல்  நிலையத்தில் அவர்களது பெற் றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய 3 பேரும் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில், காதல் ஜோடியை  சேர்த்து வைப்பதற்கு மேற்கண்ட காவலர்கள் லஞ்சமாக ரூ.20  ஆயிரம் பெற்றதாக கூறப்பட்ட நிலை யில், இந்த தொகையை பங்கு வைப்பதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் காவல் நிலையத்திலேயே காரசாரமாக மோதி கொண்டனர். இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு சென்றது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, காதல் ஜோடியை சேர்த்து வைக்க பணம் பெற்றதும், பங்கு போடுவதில் தகராறு செய்ததும் உறுதியானது. இதனைத்தொடர்ந்து மூன்று பேரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, துறை ரீதியதாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

நாமக்கல், அக்.13- நாமக்கல் மாவட்டத்தில் 12 குழந்தை  திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட் டுள்ளதாக ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.  நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு, ஒருங்கிணைப்புக் குழு மற்றும் குழந்தைகள் நலக்குழு கூராய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலக  கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் செவ் வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளியில் இடைநின்ற மாணவ- மாணவியரின் தற்போதைய நிலை, அதற்கான காரணம், சிறார்  திருமணம், ஒருங்கிணைந்த குழந் தைகள் பாதுகாப்பு திட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகள் ஆகியவற்றின்படி குழந்தைகள் இல்லங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், சட்டத்துக்கு புறம்பான தத்தெடுத்தலை தடுப்பது, வட்டார மற்றும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட் டங்களில் குழு உறுப்பினா் அனைவரும்  கலந்துகொள்வதை உறுதி செய்தல்  மற்றும் குழந்தைகளின் நலன் பாது காப்பு அம்சங்களில் மேற்கொள்ளப் பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசு கையில், நாமக்கல் மாவட்டத்தில் சிறார்  திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க  தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரி யர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் தங்கள் பகுதியில் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும். சிறார் திருமணம் நடைபெறுவது தெரியவந்தால் குழந் தைகள் பாதுகாப்பு எண் 1098 என்ற  இலவச தொடர்பு எண்ணுக்கு பொது மக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரி விக்க வேண்டும். கடந்த 3 மாதங்களில் வந்த தகவல்  அடிப்படையில் 12 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் நடைபெற்ற 20 சிறார் திருமணங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள்  மீது வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளன, என்றார்.

கஞ்சா ஒழிப்பு வேட்டை 17 பேருக்கு நீதிமன்ற காவல்

ஈரோடு, அக். 13- ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் மீது காவல் துறையினர் தொடர்ந்து நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் கஞ்சா விற்ப னையை அழித்தொழிக்க வேண்டி, ஈரோடு மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஏ.சசிமோகனின் நேரடி மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் புதனன்று தீவிர கஞ்சா ஒழிப்பு வேட்டை  (அந்தந்த காவல் நிலைய எல்லைகளில்) நடத்தப்பட்டது. அதில் கஞ்சா விற்பனை தொடர்பாக கண்காணிப்பில் வந்த 118 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் 17 பேர் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு  உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 70 பேர் இனி வருங் காலங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய நிர்வாகத்துறை நடுவர் முன்னி லையில் நன்னடத்தைக்கான பிணையப் பத்திரம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட 17 நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கு வதற்காக சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் கஞ்சா விற்பனை போன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு 9488010684 என்ற  செல்போன் எண்ணிற்கு வாட்ஸ் ஆப் அல்லது குறுஞ் செய்தி வாயிலாக தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப் பவரின் ரகசியம் காக்கப்படும் எனவும் ஈரோடு மாவட்ட காவல் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான இறகு பந்து போட்டி அவிநாசி மாணவர் தங்க பதக்கம்

அவிநாசி, அக்.13- தேசிய அளவிலான இறகு பந்து போட்டியில் இரட்டையர்  (கலப்பு) பிரிவில் அவிநாசி மாணவர் தங்கப் பதக்கம் பெற்று  சாதனை படைத்துள்ளார். தேசிய அளவிலான இறகு பந்து போட்டி அக்.3 முதல் அக். 10ஆம் தேதி வரை ஐதராபாத்தில் நடைபெற்றது. இப்போட்டி யில் அவிநாசியைச் சேர்ந்த தனியார் பள்ளி 12 ஆம் வகுப்பு  மாணவர் அருள்முருகன், சென்னை மாணவி ஸ்ரீமதி என்பவ ருடன் இரட்டையர்(கலப்பு) இறகு பந்து போட்டியில் பங் கேற்றார்.  இதில் இவர்கள் முதலிடம் வென்று தங்கப் பதக்கம் பெற்று  சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் அருள்முருக நவம் பர் 29ஆம் தேதி தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய அளவி லான(ஜூனியர்) போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள் ளார்.  அவிநாசியில் பெட்டிக் கடை நடத்தி வரும் ரவி என்பவ ரின் மகனான இவர், ஏற்கனவே கோவாவில் நடைபெற்ற  தேசிய அளவிலான இரட்டையர் இறகு பந்து போட்டியிலும் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க  கோரிக்கை

அவிநாசி, அக்.13- வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின் சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும் என அனைத்து பொது  தொழிலாளர் நல அமைப்பின் பொது செயலாளர் ஈ.பி.சரவ ணன் கேட்டுகொண்டுள்ளார். அவர் மின்வாரிய அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த  மனுவில் கூறியிருப்பதாவது: வீடுகளுக்கு வழங்கப்பட்டு  வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவ தாக மின்வாரியம் பெயரில் அனுப்பியுள்ள குறுச்செய்தி யால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இதில்  கட்டண விகிதமும் மாற்றம் செய்யப்பட்டதாக வந்த தகவல் படி, கட்டணம் இரண்டரை மடங்கு கூடுதலாக செலுத்த வேண் டியுள்ளது. ஆகவே தற்போது உள்ளபடியே, 100 யூனிட்  இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். மின்  இணைப்பு வேண்டி, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பார பட்சமின்றி முறையாகவும் துரிதமாகவும் மின்இணைப்பு  வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

சந்தையில் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு: விவசாயிகள் மேயரிடம் புகார்

திருப்பூர், அக். 13 - திருப்பூர் பல்லடம் சாலை தென்னம்பாளையம் சந்தை யில் விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வியாபாரி கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதை மீட்டுத் தரக் கோரியும் திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வியாழக் கிழமை மேயர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இம்மனுவில்  கூறியிருப்பதாவது: திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் விவசாயி களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தை வியாபாரிகள் ஆக்கிர மித்து வைத்துள்ளனர்.  அதேபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட கட்டி டத்தை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு முழுமையாக விட  வேண்டும்.  சுகாதாரமற்ற முறையிலும், நோய் பரவக்கூடிய  நிலையிலும் உள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டை அன் றாடம் தூய்மைப்படுத்தி தருமாறும், குடிநீர், கழிப்பிட வசதி களை போர்க்கால அடிப்படையில் செய்து  தரவும் கட்சி சார் பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மேயரிடம் கேட்டுக்  கொண்டனர்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது

திருப்பூர், அக். 13 – திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் காவல் எல்லைக்கு  உட்பட்ட முத்தூர் தொட்டிபாளையம் பகுதியில் 6 வயது சிறு மியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 15 வயது சிறுவன்  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆறு வயது சிறுமி ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த  9ஆம் தேதி மாலை 6 மணியளவில் அந்த சிறுமி வீட்டின்  அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது, 10ஆம் வகுப்பு  படிக்கும் 15 வயது சிறுவன் அந்த சிறுமியை தனது வீட்டுக்கு  அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த  சம்பவம் பற்றி சிறுமி தன் தாயிடம் கூறியதை அடுத்து காங் கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக் கப்பட்டது. காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் வழக் குப் பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்து புதன்கி ழமை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடக்கல்வி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

அவிநாசி, அக்.13- தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத் தும் இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி முகாம் சேவூர் பந்தம் பாளையம் தனியார் பள்ளியில் அக்டோபர் 10,11,12 ஆகிய  தேதிகளில் நடைபெற்றது. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார் பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல்  5 ஆம் வரை வகுப்பு கற்பிக்கும் தொடக்கக்கல்வி ஆசிரியர்க ளுக்கு நடைபெற்ற இப்பயிற்சியில் தமிழ், ஆங்கிலம் மற்றும்  கணக்குப் பாடங்களை கற்பிக்கும் முறை குறித்து விளக்கம ளிக்கப்பட்டது. செயல்முறை விளக்கத்துடன் வடிவமைக்கப் பட்ட இப்பயிற்சியில் ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற் றனர். மாவட்ட ஆசிரியர், கல்வி மற்றும் பயிற்சி நிறுவன  முதல்வர், விரிவுரையாளர்கள், மாவட்டக்கல்வி அலுவலர் கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட ஒருங்கி ணைப்பாளர்  ஆகியோர் மையத்தைப் பார்வையிட்டு ஆலோ சனைகள் வழங்கினர். மேலும் வட்டாரக்கல்வி அலுவலர் கள், ஆசிரியர் பயிற்றுநர்களும் இப்பயிற்சியில் பங்கேற் றனர்.

லாரி மோதி காவலாளி பலி

திருப்பூர், அக்.13- திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில், ஊட்டியை சேர்ந்த மகாதேவன் (வயது 42) வசித்து வந்தார். இவர்  இங்குள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் காவலாளி யாக வேலை செய்து வந்தார். வியாழனன்று அனுப்பர்பாளை யம் பகுதியில், மாநகராட்சி முதலாம் மண்டல அலுவலகம்  அருகில் உள்ள ஒரு செல்போன் கடையில் தனது போனுக்கு  ரீசார்ஜ் செய்வதற்காக வந்த மகாதேவன், ரீசார்ஜ் செய்து  விட்டு திரும்பி தனது டூவீலர் வாகனத்தை எடுக்க வந்தார். அப் போது அந்தப் பாதையில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று  அவர் மேல் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து 15 வேலம்பாளையம்  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மின் கட்டண உயர்வு: அமைச்சரை மீண்டும் சந்திக்க விசைத்தறியாளர்கள் முடிவு

திருப்பூர், அக்.13- சாதா ரக விசைத்தறிக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக  மாநில மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்  பாலாஜியை மீண்டும் சந்தித்து வலியுறுத்து வது என்று விசைத்தறியாளர்கள் முடிவு செய் துள்ளனர். திருப்பூர் மாவட்டம், மங்கலத்தை அடுத்த  சுல்தான்பேட்டை அம்மன் கலையரங்கத்தில் புதன்கிழமை காலை 11 மணிக்கு மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்க தலை வர் ஏ.பி.வேலுச்சாமி தலைமை தாங்கினார்.  துணைத் தலைவர் சுல்தான்பேட்டை ஆர். கோபால், சங்க செயலாளர் பழனிச்சாமி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில் விசைத்தறியாளர்கள் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து  கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில்,   மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை  இன்னும் இரண்டு தினங்களில் நேரில்  சந்தித்து சாதா விசைத்தறிக்கு உயர்த்திய  மின் கட்டணத்தை குறைக்க முதல்வரின் கவ னத்திற்கு எடுத்துச் செல்லவும், உடனடியாக  மின்கட்டண உயர்வை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்த முடிவு செய்யப்பட் டது.  மின் கட்டணம் செலுத்தாத விசைத்தறி  கூடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட் டால் விசைத்தறி கூட்டுக்கமிட்டி எடுக்கும் முடி வுக்கு  கட்டுப்படுவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

வீடு புகுந்து நகை பறிப்பு: இலங்கையை சேர்ந்த இருவருக்கு ஓராண்டு சிறை

திருப்பூர், அக். 13 - அவிநாசியில் அரசுப் பள்ளி ஆசிரியையி டம் 10 பவுன் நகை பறித்த, இலங்கையை சேர்ந்த இருவருக்கு ஓராண்டு சிறை தண் டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவிநாசி அருகே நியூ டவுன் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடாசலபதி (51), தனி யார் நிறுவன அலுவலர். இவரது மனைவி  ஜோதிலட்சுமி (45). இவர் அம்மாபாளையம் அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணி யாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2019  ஆம் ஆண்டு, ஏப். 25 ஆம் தேதி இரவு ஜோதி லட்சமி தனது வீட்டின் பின் கதவை அடைப்ப தற்காக எழுந்து சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த 2 பேர், நகையை பறித்து சென்றனர். இது குறித்து அவிநாசி போலீஸாரிடம் ஜோதிலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து புலன் விசாரணை மேற் கொண்டனர். இதில், இலங்கை மட்டகளப்பு கயாங்கணி மாங்கனி பகுதியை சேர்ந்த தர்மகுமார் (41), இலங்கை கொச்சிக்கடை நீர்க்கொழம்பு பகுதியைச் சேர்ந்து முகமது ரிபாஸ் (26) ஆகியோர் ஜோதிலட்சுமி அணிந்திருந்த வளையல், தங்கச் சங்கிலி உள்ளிட்ட 10 பவுன் நகைளை பறித்தது தெரியவந்தது.  இதையடுத்து 2 பேரையும், அவிநாசி போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, அவிநாசி குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வேறு  சில வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் தர்மகுமார் மற்றும் முகமது ரிபாஸ் ஏற்க னவே திருச்சி மற்றும் புழல் சிறையில் அடைக் கப்பட்டிருந்த நிலையில், இருவரை அழைத்து வந்து, அவிநாசி குற்றவியல் நடு வர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத் தினர். தர்மகுமார், முகமது ரிபாஸ் ஆகியோ ருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், தலா  ரூ.1000 அபராதமும் விதித்து அவிநாசி குற்ற வியல் நீதிமன்ற நடுவர் கே.எஸ்.ஷபீனா தீர்ப் பளித்தார். இதைத் தொடர்ந்து 2 பேரும் கைது  செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாநில கல்விக் கொள்கை: திருப்பூர் மாவட்டத்தில் இன்று கருத்து கேட்பு கூட்டம்

மாநில கல்விக் கொள்கை: திருப்பூர் மாவட்டத்தில் இன்று கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் அக். 13- திருப்பூர், பல்லடம், தாராபுரம், மடத்துக்குளம் பள்ளிக ளில் மாநிலக் கல்விகொள்கை வகுக்க கருத்துக் கேட்புக் கூட் டம் வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது.  தமிழகத்துக்கு தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை வகுப்பதற்காக, திருப்பூர் மாவட்டத்தில் கருத்துக்  கேட்புக் கூட்டம் இன்று (அக்.14) மதியம் 2 மணி அளவில் நடை பெறுகிறது. மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் நடை பெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கல்வியாளர்கள், தலைமை ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவ னங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பெற்றோர்  கலந்து கொள்ளலாம். கருத்துக்களை தெரிவிக்க விரும்புவோர் தங்கள் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்து  கூட்டத்தில் ஒப்படைக்கலாம். இந்த கருத்துக் கேட்புக் கூட்ட மானது திருப்பூர் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாராபு ரம் என்சிபி நகரவை மேல்நிலைப்பள்ளி மற்றும் மடத்துக்கு ளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறு வதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பயணச்சீட்டு இன்றி பயணம்: சேலம் கோட்டத்தில் ரூ.1.41 கோடி அபராதம்

சேலம், அக்.13- சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில் களில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்த 18 ஆயிரத்து 158 பேரிடமிருந்து ரூ.1 கோடியே 41 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில் களில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய் வதை தடுக்கும் வகையில் சோதனை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சேலம்  ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் சீனி வாஸ் உத்தரவின்பேரில், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமை யில் பயணச்சீட்டு பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினர் அடங்கிய குழுவி னர், ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், விரைவு, பயணிகள் ரயில்களில் பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய சோதனையில், பயணச்சீட்டு இன்றி பய ணம் செய்தவர்கள், பொது பெட்டி பயணச் சீட்டை வைத்து முன்பதிவு பெட்டியில் பய ணம் செய்தவர்கள், அதிக பார்சல் கொண்டு  வந்தவர்கள் உட்பட 18 ஆயிரத்து 158 பேர் பிடிபட்டனர். இதையடுத்து அவர்கள் மீது  ரயில்வே சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப் பட்டு ரூ.1.41 கோடி அபராதம் வசூலிக்கப் பட்டது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட முது நிலை மேலாளர் ஹரிகிருஷ்ணன் கூறுகை யில், சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய சோதனையில், பயணிச்சீட்டு இன்றி பயணம் செய்தவர்களிட மிருந்து ரூ.1.41 கோடி அபராதம் வசூலிக் கப்பட்டுள்ளது. மேலும், ரயிலில் பயணச் சீட்டு இல்லாமல் பயணிப்பது தண்டனைக் குரியது. அவர்களிடமிருந்து இரு மடங்கு கட் டணம் வசூலிக்கப்படுவதுடன், ஓராண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, பயணச்சீட்டு இல்லா மல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், என அறிவுறுத்தினார்.

கோவை - ஈரோடு மெமு ரயில் நேரம் மாற்றம்: பயணிகள் கோரிக்கை ஏற்பு

கோவை, அக்.13- கோவை - ஈரோடு மெமு ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ள தாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவையில் இருந்து தினமும் இயக்கப்படும் கோவை -  ஈரோடு மெமு ரயிலில் திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட பகுதி களுக்கு வேலை நிமித்தமாக மற்றும் கல்லூரி மாணவ, மாண விகள் உள்ளிட்ட ஏராளமானோர் பயணித்து வருகின்றனர். இந்த ரயில் கோவையில் இருந்து தினமும் மாலை 6.35 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு ஈரோட்டைச் சென்ற டையும். இந்நிலையில் ரயிலை மாலை 6 மணிக்கு மாற்றுமாறு பயணிகள் தரப்பில் சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகளி டம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதைத்தொ டர்ந்து, இந்த ரயிலானது கோவையில் இருந்து ஈரோட்டுக்கு மாலை 6.10 மணிக்குப் புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை  ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை முதல் தினமும் மாலை 6.10 மணிக்குப் புறப்படும் மெமு ரயில் இரவு 8.35 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயி லானது வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் சாலை, சோமனூர், வஞ்சிபாளையம், திருப்பூர், ஊத் துக்குளி, விஜயமங்கலம், ஈங்கூர், பெருந்துறை, தொட்டி பாளையம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம்மில் திருட முயற்சி - 2 பேருக்கு 3 ஆண்டு சிறை

சூலூர், அக்.13- ஏடிஎம்மில் திருட முயன்ற வட மாநில இளைஞர் இருவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து சூலூர் குற்ற வியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது. கோவை சூலூர் அருகே உள்ள தென்னம் பாளையம் பகுதியில் தனியார் வங்கியின் ஏடி எம்மில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி செய்த சம்பவத்தில், வட மாநில இளை ஞர்களான பிஜேந்திரவுராவ், கோவிந்தரவு ராவ் ஆகிய இருவரையும் சூலூர் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் சூலூர் நீதிமன்ற நீதிபதி ரூபனா இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் இருவருக் கும் தலா மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து குற்றவாளிகள் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள திட்டம்  சேலம் மாநகராட்சி ஆய்வு கூட்டத்தில் முடிவு

சேலம், அக்13- சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் நடை பெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மண்டல அளவிலான அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்களுட னான கலந்தாய்வு கூட்டம் நடத்த திட்டமிடப் பட்டு அதன் முதற்கூட்டம் மாநகராட்சி ஆணை யாளர் தா.கிறிஸ்துராஜ் முன்னிலையில் மேயர் ஆ.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.  இதில், நடைபெற்று வரும் சாலை பணி களின் முன்னேற்றம், தூய்மை பணியாளர் கள் குடியிருப்பு பகுதிகளில் மேற்கொள்ளும் பணிகள், கழிவுநீர் ஓடைகள், சாக்கடைகள் தூர்வாருதல், சாலைகளில் இருபுறமும் கழிவு நீர் கால்வாய்கள் அமைத்தல், சீரான முறை யில் குடிநீர் விநியோகம் செய்தல் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக மழைநீர் வடிகால் பணிகளுக்கு முக்கியத்து வம் அளித்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், எதிர்வரும் வடகிழக்கு பருவமழையால் மண்டலத்திற்குட்பட்ட பகு திகளில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் குறித்தும், வார்டு பகுதிகளில் பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தரும்  வகையில் அனைத்து அடிப்படை வசதிகளை யும் முறையாக மேற்கொள்வது குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், துணை மேயர் மா.சாரதா தேவி, மண்டலக்குழுத் தலைவர் செ.உமா ராணி, மாநகர பொறியாளர் ஜி.ரவி, மாநகர நல அலுவலர் என்.யோகானந், செயற்பொறி யாளர் பழனிசாமி, உதவி ஆணையாளர் தியாக ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பரம்பிக்குளம் அணை மதகை சீரமைக்கும் பணி துவக்கம்

கோவை, அக்.13- சேதமடைந்த பரம்பிக்குளம் அணை மதகை சீர் அமைக்கும் பணி ரூ.7 கோடியே 20 லட்சம் செலவில் துவங்கப் பட்டு, 50க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் அணையில் உள்ள மூன்று மதகுகளில் நடுவில் இருந்த மதகு கடந்த செப்.20 ஆம் தேதி யன்று இரவு உடைப்பு ஏற்பட்டது. இத னால் கோவை, திருப்பூர் மாவட்ட விவ சாயிகளின் பாசனத்திற்காக தேக்கி வைக்கப்பட்ட 6 டிஎம்சி தண்ணீர் கேரளா மாநிலம், பாரத புழாவிற்கு சென்றது. இதையடுத்து தமிழக நீர் பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற் கொண்டு, தமிழக முதல்வரின் கவனத் துக்கு கொண்டு சென்றார். இதைய டுத்து அமைச்சர் முன்னிலையில் துறை சார்ந்த அதிகாரிகள் மத்தியில் ஆலோ சனை நடத்தபட்டு, மதகை சீரமைக்க தமி ழக அரசு சார்பில் ரூ.7 கோடியே 20 லட் சம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு திருச்சியில் அணைக்கு மதகு தயாரிக் கும் பணியும், அணையில் மதகு பொருத் தப்படும் இடத்தில் பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வரு கிறது. அணையின் நடுப்பகுதி சங்கிலி இணைக்கும் பீம் 37 டன்னும், மதகு 40 டன் எனவும் தமிழகம் மற்றும் கேரளா பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். மேலும்,  30 நாட்களுக் குள் பணிகள் முழுமையாக முடிந்து விடும் என்றும், கோவை, திருப்பூர் மற் றும் கேரளா விவாசாயிகளுக்கு முறை யாக பாசனத்திற்கு தண்ணீர் உரிய நேரத் தில் வழங்கப்படும் என்றும் உதவி செயற் பொறியாளர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

டெட் தேர்வு மையங்கள் அறிவிப்பு

ஈரோடு, அக்.13- ஈரோடு மாவட்டம், கருந் தேவன் பாளையத்திலுள்ள அல்அமீன் பொறியியல் கல் லூரி, துடுப்பதியில் செங் குந்தர் பொறியியல் கல்லூரி, டி.என்.பாளையத்தில் ஜேகேகே பொறியியல் கல் லூரி, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி, ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி, கோபி பிகேஆர் ஆர்ட்ஸ், தாசம்பாளையம் வெங்கடேஸ்வரா பொறி யியல் கல்லூரி, திண்டல்  விஇடி ஆர்ட்ஸ் ஆகிய மையங் ளில் அக்.14 (இன்று) முதல்  20 ஆம் ஆம் தேதி வரை டெட் தேர்வு நடைபெறுகிறது.
 

;