தருமபுரி, ஜன.12- பொதுநூலகத்துறை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் தருமபுரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பொதுநூலகத்துறை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில், சமத்துவ பொங்கல் விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பி.சரவணன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஜி.தும்பாராவ் வரவேற்றார். பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கலந்து கொண்டு, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திற னாளிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். இந் நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் டி.சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவ லர் பி.செண்பகவள்ளி, மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் இரா.மோதஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.