திங்கள், மார்ச் 1, 2021

districts

img

இபிஎஸ் தலைகீழாக நின்றாலும் வெற்றிபெற முடியாது பி.ஆர்.நடராஜன் எம்.பி., பேச்சு

கோவை, ஜன. 25-  மாநில உரிமைகளை பறி கொடுத்த இபிஎஸ் தலைகீழாக நின்றாலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற முடியாது என கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித் துள்ளார். ”வெல்லட்டும் திமுக கூட் டணி” என்கிற முழக்கத்தை முன் வைத்து திராவிடத் தமிழர் கட்சி யினர் பிரச்சார இயக்கத்தை  முன் னெடுத்து வருகின்றனர். இதன் துவக்கவிழா பொதுக்கூட்டம் ஞாயிறன்று கோவை ரயில் நிலை யம் அருகில் உள்ள அண்ணாமலை அரங்கத்தில் நடைபெற்றது. இவ் வமைப்பின் மாவட்டச் செயலாளர் நந்தன் தம்பி தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் திமுக கோவை கிழக்கு மாநகர் மாவட்டச் செயலா ளர் நா.கார்த்திக், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், திராவிடத் தமிழர் கட்சியின் தலை வர் வழக்கறிஞர் சி.வெண்மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் பி.ஆர்.நடரா ஜன் எம்.பி., பேசுகையில்,  வெல் லட்டும் திமுக கூட்டணி என்கிற தின்ணை பிரச்சாரத்தை இன்றிலி ருந்து 90 நாட்கள் இடைவிடாது நடத்த வேண்டும். இதில், திமுக கூட்டணி ஏன் வெல்ல வேண்டும் என்கிற அவசியத்தை வீடு, வீடாக மக்களிடம் எடுத்துரைக்க வேண் டும். தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுத்த அதிமுகவும், இபி எஸ்-சும் தலைகீழாக நின்றா லும் வெற்றிபெற முடியாது. தமிழக மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டனர். திமுக கூட்டணி நிச்ச யம் ஆட்சியை பிடிக்கும். அத்த கைய மாற்றத்திற்கு நாம் ஒவ் வொருவரும் சுற்றிச்சுழன்று பணி யாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

 முன்னதாக, இந்த கூட்டத்தில் திமுக மாநில சட்டத்துறை இணைச்செயலாளர் கே.எம். தண்டபானி, திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் ஜி.டி.ராஜேந் திரன், திராவிடன் அறக்கட்டளை நிறுவனர் கோவை பாபு மற்றும் களப்பிரர், ஆதவன் உள்ளிட் டோர் உரையாற்றினர். இந்நிகழ் வில் ஏராளமானோர் பங்கேற்ற னர்.

;