திருப்பூர், பிப்.26- மத்திய அரசு சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை உதவி யுடன், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, சென்னை மாவட்ட தேசிய பசுமை படை, சுற்றுச்சூழல் கல்வி அறக்கட் டளை மற்றும் திருப்பூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை ஆகியவை இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட் சியை நடத்தினர். திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதனன்று நடை பெற்ற இந்த கண்காட்சியில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 60 அரசுப் பள்ளி களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இவர்கள் வெவ்வேறு குழுக்களாக கலந்து கொண்டு திணை போன்ற ஆரோக்கிய உணவுகள், ஆற்றல் சேமிப்பு அளவீடுகள், ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிகளுக்கு மாற்று, கழிவில் இருந்து செல்வம், கால நிலை மாற்ற தாக்கங்களின் கணிப்பு நடவடிக்கைகள், தோட்டம் அமைத்தல், நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, பசுமை வாழ்க்கை முறை, மாசுபாடு களை களைதல் போன்ற கருத்துக் களை மையப்படுத்தி தங்கள் படைப் புகளை காட்சிப்படுத்தினர். இந்நிகழ்வில் மாசு கட்டுப்பாட்டு வாரிய திருப்பூர் வடக்கு உதவி செயற் பொறியாளர் திப்புசுல்தான் தலைமை உரையாற்றினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் கண்காட் சியை துவக்கி வைத்தார். பல்வேறு பள் ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவி கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கண்காட்சியைப் பார் வையிட்டனர். இந்த கண்காட்சியில் பூளவாடி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த குழுவி னர் முதல் பரிசாக ரூ.10ஆயிரம், வஞ்சி பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி 2 ஆம் பரிசாக ரூ.8 ஆயிரம், மூன்றாம் பரி சாக முருகப்ப செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ரூ.7 ஆயிரம் பெற் றனர். திருப்பூர் மாவட்டத்தின் பெல்லம் பட்டி மற்றும் கருப்பகவுண்டம்பாளை யம் பகுதியைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளிகள் சிறப்பு பரிசாக தலா ரூ.5 ஆயிரம் பெற்றனர். வெற்றி பெற்றவர்க ளுக்கு திருப்பூர் மாவட்ட வனச்சரகர் சுரேஷ் கிருஷ்ணா கலந்து கொண்டு பரி சுகளை வழங்கி பாராட்டு தெரிவித் தார்.