தமிழக அரசின் தன்னிச்சையாக போனஸ் அறிவிப்பை கண்டித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் (சிஐடியு) உதகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், போக்குவரத்து ஊழியர் சங்க துணை பொதுச்செயலாளர் பி.கணேசன், சிஐடியு மாவட்ட தலைவர் எல்.சங்கரலிங்கம், மாவட்ட செயலாளர் சி.வினோத், பொருளாளர் ஏ.நவீன் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று சூரம்பட்டி நால் ரோட்டில் நடைபெற்ற சிஐடியு ஆர்ப்பாட்டத்தில், ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் செயலாளர் வி.பாண்டியன் தலைமை வகித்தார். சிஐடியு தலைவர் எஸ்.சுப்ரமணியன், மாவட்ட செயலாளர் ஹச்.ஸ்ரீராம், மாவட்ட உதவி தலைவர் என்.முருகையா, மாவட்ட துணை செயலாளர் பி.ஸ்ரீதேவி உள்ளிட்ட்ட தலைவர்கள் உரையாற்றினர்.