திருப்பூர், அக். 13- பெண்கள் பணிபுரியும் இடங்களில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் புகார் கமிட்டி அமைக்க உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு வலியுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் சிஐடியு அலுவல கத்தில், உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்பு குழு பேரவை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட செயலாளர் சித்ரா தலைமை யில் நடைபெற்ற இப்பேரவையில், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், மாவட்ட பொருளாளர் ஜி.சம்பத், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் கு. சரஸ்வதி, உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்பு குழு மாவட்ட கன்வீனர் எம்.பாக்கி யம், மாவட்டச் செயலாளர் எல்லம்மாள், பனி யன் சங்கம் சஜீனா, உள்ளாட்சி ஊழியர் சங் கம் காளியம்மாள் ஆகியோர் வாழ்த்தி பேசி னார். இதையடுத்து பெண்கள் பணிபுரியும் இடங்களில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்ப டையில் புகார் கமிட்டி அமைக்க வேண்டும், அமைப்பு சாரா பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண் டும், அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்க ளுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியர் ஆக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. புதிய நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவிற்கு 15 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மாவட்ட அமைப்பாளராக எம்.பாக் கியம் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிறைவாக உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாநில கன்வீனர் தனலட்சுமி நிறைவுறை யாற்றினார். இதில் உழைக்கும் பெண்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.