districts

img

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எப்டிஏ-வை விடுவித்திடுக

தருமபுரி, நவ.20- நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப் பட்டு பல ஆண்டுகள் ஆன பின்னரும், இது நாள் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள  எப்டி ஏ-வை உடனடியாக விடுவிக்க வேண்டும் என நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வலியு றுத்தி உள்ளது. தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தருமபுரி ஆவண காப்பக வளாகத்தில் மாவட்ட துணைத்தலைவர் பொ.குமரவேல் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கி.வெங்கட்டேஙன் வரவேற்றார்.  மாநிலத் தலைவர் ஜெ.ராஜா, மாநில பொதுச் செயலாளர் அண்ணாகுபேரன், மாநிலச் செய லாளர் ரா.கல்பனா ஆகியோர் சிறப்புரையாற் றினர். கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் அ. பெரியசாமி, திருப்பத்தூர் மாவட்ட தலைவர் லி.ரவி, மாவட்ட செயலாளர் கோ.பனிமலர் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

இக்கூட்டத்தில், ஒரு நில அளவிற்கு 80  மனுக்கள் என்ற மனித சக்திக்கு மீறிய செய் மான குறியீட்டினை கட்டாயம் ஈட்ட வேண்டும் என்ற நில அளவை மற்றும் நில வரி திட்ட இயக்குநரின் அறிவுரை என்ற பெயரில் வரும் சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண் டும். இணைய வழி உட்பிரிவு மட்டுமில்லா மல் எல்லை அளவு உள்ளிட்ட அளவு பணி களில் செய்மானம் என்று, நில உடமை மேம் பாட்டு திட்டத்திலிருந்து சொல்லப்பட்டு வந்த  குறியீட்டு அளவை எல்லாம் புறந்தள்ளி தான் தோன்றித்தனமாக வாய்க்கு வந்த எண்களை எல்லாம் செய்மான குறியீடாக நிர்ணயிக்கக் கூடாது. செய்த மற்ற பணிகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் நிலுவை மனுக்களை  காரணமாக சொல்லி, களப்பணியாளர்கள் மீது எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையை  கைவிட வேண்டும். நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு பல ஆண்டுகள் ஆன பின்னரும், இதுநாள் வரை நிறுத்தி வைக்கப் பட்டுள்ள  எப்டிஏ-வை உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து நில அளவை அலுவ லர்கள் ஒன்றிப்பின் மாவட்ட தலைவராக வெங்கட்டேசன், மாவட்ட செயலாளராக பிரபு, பொருளாளராக முருகன், மாவட்ட துணைத்தலைவராக ராமமூர்த்தி, மாவட்ட இணைச்செயலாளராக தவமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக, மாவட்ட இணைச்செயலாளர் க.தவமணி நன்றி கூறி னார்.