districts

img

நியாயவிலை கடைகளுக்கு தரமான அரிசி, பருப்பு வழங்க வலியுறுத்தல்

திருப்பூர், டிச. 11 - திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர்கள் சங்கம் (சிஐடியு) நிர்வாக குழு கூட்டம் வெள்ளியன்று  சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் பி.கௌதமன் தலைமையில நடை பெற்றது.  இக்கூட்டத்தில்,  நியாய விலை கடைகளில் மாவட்டம் முழுவதும் தேங்கியுள்ள காலிச்சாக்குகளை உடனடி யாக எடுக்க வேண்டும். நியாய விலைக்  கடைகளில் விற்பனையாளர்கள் ஒப்புதல்  இல்லாமல் தேவையற்ற மளிகை பொருட் களை கட்டாயப்படுத்தி இறக்கப்படு வதை தவிர்க்க வேண்டும். விற்பனையாளர் களுக்கு கூடுதல் பணிக்கு வழங்க வேண்டிய  ஊக்கத்தொகை நிலுவையை உடனடியாக வழங்க மண்டல இணைப்பதிவாளர் நடவ டிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு அளிக்க  வேண்டிய புள்ளி விவரங்களை உடனடி யாக வழங்க விற்பனையாளர்களை கட்டா யப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கு வதை தவிர்க்க வேண்டும். திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை, மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். நியாய விலை கடைகளுக்கு தர மான அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றை அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், கோதுமை ஒதுக்கீட்டை அதிகப் படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்  கே. மகேந்திரன், மாவட்ட பொருளாளர் பி. சுரேஷ், மாவட்டத் துணைத் தலைவர்கள்  வி.கருப்புசாமி டி.ராமு, மாவட்டத் துணைச் செயலாளர் கே.எம்.சரவணமூர்த்தி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, சிவக்குமார், ராஜேந்திரன், சிவகாமி ஆகி யோர் கலந்து கொண்டனர்.