ஈரோடு, செப்.5- நலவாரிய பணப்பயன்களை தாமதமின்றி வழங்க வேண் டும் என சிஐடியு பவானி பொதுத்தொழிலாளர் சங்கம் வலியு றுத்தியுள்ளது. சிஐடியு பவானி பொதுத்தொழிலாளர் சங்கத்தின் ஆண்டு மகாசபை ஆப்பக்கூடலில் ஞாயிறன்று சங்க தலைவர் ஏ.ஜெக நாதன் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலை வர் எஸ்.சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிசாமி, தாலுகா செயலா ளர் எஸ்.மாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். இதில், அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நல வாரிய ஆன்லைன் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக் களை பெறுதலில் உள்ள குறைபாடுகளை மிக துரிதமாக சரி செய்ய வேண்டும். மேலும், நலவாரிய அலுவலகத்திற்கு நேரில் வந்து நலவாரிய மனுக்களை ஆப்லைனில் சமர்ப்பிக்க வும் அனுமதிக்க வேண்டும். நிலுவையிலுள்ள கேட்பு மனுக் கள் பரிசீலிக்கப்பட்டு பணப்பயன்களை தாமதமின்றி வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தி யாவசிய பொருட்களின் விலை உயர்வை ஒன்றிய அரசு கட் டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் தலைவராக எம்.காளீஸ் வரன், செயலாளராக ஏ.ஜெகநாதன், பொருளாளராக பி. பெரியசாமி உள்ளிட்ட 12 பேர் கொண்ட நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது.