districts

img

இஎஸ்ஐ, பிஎப் போன்ற பாதுகாப்பு வசதிகள்

சேலம், செப்.14 - இஎஸ்ஐ, பிஎப் போன்ற பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி  தர வேண்டும் என சிஐடியு சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம்  வலியுறுத்தி உள்ளது. சேலம் ஜில்லா சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) ஆண்டு பேரவை வி.பி.சிந்தன் நினைவகத்தில் சங்கத்தின் தலைவர் பி.ஆறுமுகம் தலைமையில் நடை பெற்றது. பேரவையை துவக்கி வைத்து சிஐடியு மாவட்ட  செயலாளர் டி.உதயகுமார் உரையாற்றினார். அறிக்கை களை சங்க பொதுச்செயலாளர் ஏ.கோவிந்தன், பொரு ளாளர் செல்வகுமார் ஆகியோர் சமர்ப்பித்தனர்.  இதில், ஒன்றிய, மாநில அரசு குடோன்களில் பணியாற்றும்  சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட தொழிலாளர்  பாதுகாப்பு வசதிகள் செய்து தர வேண்டும். செவ்வாய் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமைப்பணி தொழிலாளர் களுக்கு கழிவறை வசதி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் தலைவராக பி.ஆறுமுகம்,  செயலாளராக ஏ.கோவிந்தன், பொருளாளராக  செல்வ குமார் உட்பட 13 பேர் உதவித்தலைவர்கள், உதவி செய லாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பேரவையை நிறைவு  செய்து தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் ஆர்.வெங்கடபதி  உரையாற்றினார். மாவட்ட உதவிச்செயலாளர் எஸ்.பிரபு நன்றி கூறினார்.  முன்னதாக, சங்கத்தின் மாநாட்டு நிதியாக அரியாக் கவுண்டம்பட்டி வேர் ஹவுஸ் ரூ.20 ஆயிரம், மளிகை பஜார்  ரூ.18 ஆயிரம், சேகோ டார்ஜ் குடோன் ரூ.10 ஆயிரம் வழங்கப் பட்டது.

;