districts

img

தொழிலாளர்களை நசுக்கும் சட்டங்களை கைவிடுக சிஐடியு சேலம் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

தொழிலாளர்களை நசுக்கும் விதமாக, தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்பு களாக கொண்டு வந்ததை ரத்து செய்ய வேண்டும் என சிஐடியு சேலம் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐ டியு) சேலம் மாவட்ட 13 ஆவது மாநாடு தோழர் கே.வைத்தியநாதன் நினைவரங்கில் (ஜீவிஎன் திருமண மண்டபம்) சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலை வர்  பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். செங்கொடியை மேக்னசைட் தொழிற்சங்க மூத்த தலைவர் கே.பழனிசாமி ஏற்றி வைத் தார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட உதவித் தலைவர் ஆர்.வைரமணி வாசித்தார். மாவட்ட உதவித்தலைவர் ஆர்.வெங்கடபதி வரவேற் றார். மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் உரையாற்றினார். மாவட்ட செயலாளர் டி. உதயகுமார் வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் வி.இளங்கோ வரவு -  செலவு அறிக்கையையும் முன்வைத்தனர். மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு,  மாநில துணைத்தலைவர் ஆர்.சிங்காரவேல், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.கணபதி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். இம்மாநாட்டில் முறைசா

இம்மாநாட்டில் முறைசாரா தொழிலாளர் களின் நலவாரிய செயல்பாடுகளை சீர மைக்க வேண்டும். சேலம் உருக்காலை,  ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங் களை தனியார் மயமாக்கக்கூடாது. தமிழக அரசு சொத்து வரி உயர்வை கைவிட வேண் டும். போக்குவரத்து கழகங்களில் உள்ள  காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப் புகளாக கொண்டு வந்ததை ரத்து செய்ய  வேண்டும். மருந்து விற்பனை பிரதிநிதிக ளுக்கு 8 மணி நேர வேலையை உத்தரவா தம் செய்ய வேண்டும். உள்ளாட்சி மற்றும்  தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் சம்பள பட்டுவாடா செய்ய வேண்டும். முறை யாக இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்து, பணி  உபகரணங்கள் வழங்க வேண்டும். கைத் தறி பட்டு நூல் விலையை குறைக்க வேண் டும். கட்டுமான தொழிலாளர்களை பாது காக்க கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு

இதைத்தொடர்ந்து சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவராக டி.உதயகுமார், மாவட்ட செயலாளராக ஏ.கோவிந்தன், மாவட்ட பொருளாளராக வி.இளங்கோ மற்றும் 21 பேர் கொண்ட நிர்வாகக்குழு உட்பட 42 பேர்  கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட் டது. முடிவில் ஏ.கோவிந்தன் நன்றி கூறினார். இதைத்தொடர்ந்து காந்தி ரோடு பகுதியிலி ருந்து கோட்டை மைதானம் வரை பிரம் மாண்ட செந்தொண்டர் பேரணி நடைபெற் றது. இதில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

நினைவு ஜோதி பயணம்

முன்னதாக, மாவட்ட துணைச்செயலா ளர் சி.கருப்பண்ணன் மேட்டூரிலிருந்து கொண்டு வரப்பட்ட கொடியை, மாவட்ட உத வித்தலைவர் எஸ்.கே.தியாகராஜன் பெற்றுக் கொண்டார். மேட்டூர் தோழர் எம்.சீரங்கன்  நினைவு ஜோதி, மாவட்ட துணைச்செயலா ளர் பி.கே.சிவகுமார், மின்னரங்க மேட்டூர் செயலாளர் கே.சுந்தர்ராஜன் தலைமையில் எடுத்து வரப்பட்டதை கைத்தறி சங்க மாவட்ட தலைவர் எஸ்.அன்பழகன் பெற்றுக் கொண் டார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.முரு கேசன், சி.உதயகுமார் தலைமையில் எடுத்து வரப்பட்ட சேலம் சிறை தியாகிகள் நினைவு ஜோதியை மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.வசந்தகுமாரி பெற்றுக்கொண்டார்.

 

;