கோவை, ஜூலை 14- வால்பாறை தேயிலை தோட்டப் பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் தொழி லாளர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கேரள வனப்பகுதியில் இருந்து வால் பாறைக்கு வந்த காட்டு யானைகள், தற் போது மீண்டும் கேரள வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. இவ்வாறு செல்லும் காட்டு யானைகள் அடிக்கடி வால்பாறை தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு வரு கின்றன. இந்த யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடு கின்றன. இந்நிலையில், பழைய வால்பாறை பகுதி யையொட்டி, சோலையாறு அணையின் நீர்நிலை பகுதிகளில் காட்டு யானைகள் முகா மிட்டிருந்தன. இந்த யானைகள் லோயர் பாரளை எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதி யில் முகாமிட்டன. காட்டு யானைகள் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடி யிருப்பு பகுதிக்குள் புகுந்து விடும் என்று அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தொழி லாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் அந்த பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். அங்கிருந்து சென்ற காட்டு யானைகள் நள்ளிரவில் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் நிர்வாகங்களுக்கும் சொந்தமான ஆனைமலை கிளப் வளாகத் திற்குள் புகுந்தன. இதன்பின் கிளப்பின் கதவு, ஜன்னல்கள் முழுவதையும் உடைத்து உள்ளே நுழைந்த காட்டு யானைகள் அறை களில் இருந்த அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தின. குறிப்பாக, சமையலறை யில் இருந்த குளிர்சாதன பெட்டிகள், சமையல் அறை பொருட்கள் அனைத் தையும் சேதப்படுத்தின. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இரவு நேர காவலாளிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித் தனர். அதன்பேரில் வால்பாறை வனச்சரக வனத்துறையின் மனித வனவிலங்கு மோதல் தடுப்பு மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கிளப்புக்குள் நின்றிருந்த காட்டு யானை களை வெளியே விரட்டினர். நீண்ட நேரத் திற்கு பின் வெளியே வந்த யானைகள் அருகில் உள்ள பாறைமேடு வனப்பகுதிக் குள் சென்றன. இந்த சம்பவத்தால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந் துள்ளனர். மேலும், எந்த நேரத்திலும் காட்டுயானை கள் குடியிருப்பு பகுதியில் நுழையலாம். எனவே, பொதுமக்கள் மற்றும் தேயிலை தோட்டத்திற்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். காட்டுயானைகள் தென்பட்டால், உடனடி யாக வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி யுள்ளனர்.