districts

img

பஞ்சப்படி கேட்டு மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, செப்.5- மின்வாரிய ஊழியர்களுக்கு பஞ்சப்படி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங் கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது.  2022 ஜனவரி 1 ம் தேதி முதல்  வழங்க வேண்டிய அகவிலைப்படி, 2022 ஜூலை 1 முதல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் மின் வாரிய பணியாளர்களுக்கு வழங்க  அரசின் அனுமதி பெற வேண்டும் என்று தமிழக அரசின் நிதித் துறை செயலர் 18.08.2022 நாளிட்ட கடித வாயிலாக அனுப்பியுள்ளார். இத னால் மின்வாரிய பணியாளர்க ளுக்கு பஞ்சப்படி வழங்குவதில் தேவையற்ற கால தாமதம் ஏற்பட் டுள்ளது. எனவே மின்வாரிய பணி யாளர்களுக்கு வழங்கவேண்டிய பஞ்சப்படியை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தருமபுரி மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு பொறியாளர் கழக திட்ட  செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். இதில், சிஐடியு தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் மாநில துணைத்தலைவர் பி.ஜீவா, மாவட்ட செயலாளர் டி.லெ னின் மகேந்திரன், ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் சி.முருகன், தொழிலாளர் பொறியா ளர் ஐக்கிய சங்க மாவட்ட தலை வர் ஷாகின்ஷா, அம்பேத்கர் எம்ளா யீஸ் யூனியன் திட்டசெயலா ளர் மாதேசன் என்எல்ஒ திட்ட செய லாளர் தர்மலிங்கம், சம்மேளன மாநில துணைத்தலைவர் தேவரா ஜன், பொறியாளர் சங்க நிர்வாகி  பசுபதி, மின்வாரிய ஓய்வுபெற் றோர் நல அமைப்பின் மாவட்ட செய லாளர் ஜி.பி.விஜியன்‌ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அம்பேத்கர் சங்க நிர்வாகி வினோத் நன்றி கூறினார்.

சேலம்

இதேபோன்று அரசு அறிவித்த பஞ்சப்படியை உடனடியாக வழங்க வலியுறுத்தி சேலத்தில் மின் ஊழி யர் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம்  மாவட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்கள் முன்பு அனைத்து  தொழிற்சங்க மின் ஊழியர் கூட்ட மைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சேலம் மேற்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு சேலம் மின் திட்ட வட்டக்கிளை தலைவர் கருப்பண் ணன் தலைமை வகித்தார். இதில், சிஐடியு செயலாளர் ரகுபதி, ஐக்கிய சங்க நிர்வாகி சின்னசாமி, தமிழ் நாடு மின் தொழிலாளர் சம்மேளன நிர்வாகி மணி, எம்ப்ளாயிஸ் பெட ரேசன் நிர்வாகி புகழேந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
 

;