districts

img

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை உடனடியாக துவங்கிடுக

கோவை, நவ.30-  கோவையில் மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை உடனடியாக துவங்கிடக்கோரி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரிய ஊழியர்களின்  ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை உடனடியாக துவங்கிட வேண்டும். மேற் பார்வை பொறியாளர் முதல் களப்பணியாளர்கள் வரை  அனைத்து பதவி உயர்வுகள் மற்றும் உள்முக தேர்வு மூலம் பதவி உயர்வுகள் வழங்கிட வேண்டும். பணி யின்போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு உடன டியாக பணி நியமன ஆணை வழங்கிட வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோவை மண்டல தலைமை பொறியாளர் அலுவலக வாயிலில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள், தொழிலாளர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.