தாராபுரம், நவ - 9 மழைக்காலங்களில் மின் விபத்துத் களை தவிர்ப்பது குறித்து மின்வா ரியத்தினர் நோட்டீஸ் அளித்து பிரச்சாரம் மேற்கொண்டனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மான கழகம், பல்லடம் மின் பகிர்மான வட்டம், தாராபுரம் கோட்டம் சார்பில் மழைக்காலங் களில் மின் விபத்துகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு நோட்டீஸ் அளித்து விளக்கம் அளிக்கப்பட் டது. தாராபுரம் பேருந்து நிலையம், பொள் ளாச்சி ரோடு, பூக்கடைக் கார்னர், அண்ணா சிலை, என்.சி.பி நகராட்சி மேல்நிலைப்பள்ளி முன்பு, ஐந்துமுனை சந்திப்பு உட்பட நகரின் பல பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்ட னர். மேலும் பொதுமக்கள் கூடும் இடங்க ளில் நோட்டீஸ்களை அளித்து அதில் மழைக் காலங்களில் மின் விபத்துகளை தவிர்ப்ப தற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்து கடைப்பிடிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்த னர். மின்வாரியத்தினரின் இந்த பிரச்சாரம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள் ளது.