districts

ஈரோடு : 23 ஆயிரம் தெருவிளக்குகள் மாற்றம் மின்கட்டணம் ரூ.50 லட்சம் குறைவு

ஈரோடு, டிச.9-  மாநகராட்சியில் 23 ஆயிரம் தெருவிளக்குகள் எல்ஈடி  பல்புகளாக மாற்றப்பட்டதையடுத்து ஆண்டு மின் கட் டணத்தில் ரூ.50 லட்சம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள் ளன. இதில் தெருக்கள், மெயின் ரோடுகளில் தெருவிளக் குகள் அமைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் அதிக மின்சாரத்தை பயன்படுத்தும் வகையிலான மின்விளக்கு கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனால் மாநகராட்சி அதிக மின் கட்டணம் செலுத்தி வந்தது. இந்நிலையில் தற் போது மாநகராட்சியில் அனைத்து தெருவிளக்குளும் எல்ஈடி பல்புகளாக மாற்றப்பட்டுள்ளதால், மின் கட்ட ணம் வெகுவாக குறைந்துள்ளது.  இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ஈரோடு மாநகராட்சியில் 23 ஆயிரத்து 124 தெருவிளக் குகள் உள்ளது. இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  ரூ.12 கோடி செலவில் 6226 தெருவிளக்குகள் புதியதாக பொருத்தப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் மின் கட்டணம் மாநகராட்சிக்கு பெரும் செலவினை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது எல்ஈடி பல்புகளாக மாற்றப்பட்ட பிறகு ஆண்டொன்றுகு ரூ.50 லட்சம் வரை மின் கட்ட ணத்தை சேமிக்க முடிகிறது என்றனர்.

;